18. நய்டியா? (அ) மேக்ஸியா?

நம் ஊரில் பெண்கள் எல்லோரும் "நய்டி" என்று ஒன்று உடுத்திக்கொள்கிறார்கள். நய்டி Nightyஎன்றால் இரவில் மட்டும் உடுத்தும் ஆடை என்பது போய் வீட்டில் உடுத்தும் ஆடை என்றாகிவிட்டது. இப்போதெல்லாம் அதுவும் இல்லாமல், அக்கம் பக்கமும் உடுத்தும் உடையாகி விட்டது. காய் வாங்க, பால் வாங்க பக்கத்து கடைக்கு செல்ல இப்படி முன்னேறி பெண்களின் பொது ஆடையாகி விட்டது.

இந்த நய்டியில் அப்படி என்ன விசேஷம் என்று பார்த்தால், அது ஒரு வசதியான மற்றும் எளிமையான ஆடை. புடவை என்றால், அங்கே ஊக்கு, இங்கே ஊக்கு என்று பல இடங்களில் புடவை ஒழுங்காக நிற்க ஊக்கு குத்த வேண்டியதாக உள்ளது (சரி வீட்டில் இருக்கும் போது யாரு குத்தப்போறாங்க).

எதற்கு இந்த நய்டி பற்றி இவ்வளவு கவலைப் படுகிறேன் என்று குழப்பமா? எல்லா நேரமமும் அணிந்துவிட்டு பிறகு ஏன் "நய்டி" என்று அழைக்க வேண்டும்? "மேக்ஸி" என்று கூறலாமே!. தமிழில் "வீட்டாடை" என்றும் சொல்லலாம் :).

பெண்களின் வீட்டாடை = பென்னாடை என்பது திரிந்து தான் அது "பன்னாடை" என்று ஒரு வார்த்தை வந்ததோ என்று கூட எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது! :))

விமரிசனங்கள்

//பெண்களின் வீட்டாடை = பென்னாடை என்பது திரிந்து தான் அது "பன்னாடை" என்று ஒரு வார்த்தை வந்ததோ என்று கூட எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது! :))//

ஹா..ஹா

பன்னாடை என்பது பனைமரத்து நாரை வைத்து தயாரிக்கப்பட்ட வடிகட்டி. நல்லதை போகவிட்டு கெட்டதை மட்டும் வடிகட்டி வைத்துக்கொள்வதால் அம்மாதிரி நபர்களை பன்னாடை என வசைபாடுவது வழக்கமாயிற்று. பெண்ணுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை:)
 
பன்னாடை என்பது தென்னை மரத்தில் இருக்கும் நாரால் ஆன சல்லடைத் துணி போன்றதொரு அமைப்பு. நீங்கள் புதுமையான விளக்கம் அளிக்க முயன்றிருக்கிரீர். :))


சின்னதம்பி
 
வாங்க செல்வன். ப்ளாக்ல தகவல் சொல்லுரேனோ இல்லையோ என் அறியாமை எல்லாம் வெளியே வருது :)
உங்கள மாதிரி சில பேரும் பொருமையுடன் இங்கே சரியான தகவல் சொல்லுரீங்க. பாராட்டுக்கள்!! வாழ்க வளமுடன்!!
 
வாங்க சின்னதம்பி. பன்னாடை தகவலுக்கு நன்றி!
யாரு கண்டா....அந்த காலத்து ஆதிவாசி பெண்கள் இந்த பன்னாடையை கூட ஆடையாக அணிந்து இருக்கலாம்:))
வாழ்க வளமுடன்!! பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி!!
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?