14. பிச்சைக்காரர்களை வாழவைப்பது எப்படி?

நமது ஊரில் பிச்சைக்காரர்கள் ஏராளம். கோயில்களின் வாசலில் வயதான முதியோர்கள், Beggersபேருந்து நிலையங்களில் சிறு குழந்தைகள், சாலை ஓரங்களிலும், நடுவிலும், தாய்மார்கள் கை குழந்தைகள், ஊனமுற்றோர்கள், தொழு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இப்படி ஏராளமான பிச்சைக்காரர்கள். தெருக்களில் பாடியும், சாலை ஓரத்திலே ஓவியம் தீட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இந்த அவசர உலகத்தில், இவற்றை ரசித்து ஒரு சிலரே காசு கொடுப்பார்கள். அந்த காசால் ஒரு முறை கூட வயிறு நிறைய சாப்பிட முடியாது இவர்களால்.

சுற்றுளா இடங்களில் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டு மக்களிடம் வற்புருத்தி பிச்சை கேட்ப்பதும் அவர்கள் காலில் விழுவதும், கோபக்கார மக்களும் அவர்களை இழிவாக பேசுவதும், இன்னும் சிலர் இவர்களை உதைப்பதும்....என்ன கொடுமை என்ன கொடுமை. உழைத்து வாழாமல் இப்படி பிச்சை எடுத்து வாழ்கிறார்களே என்று பல பேர் கோபப்படலாம்.
வல்லரசு நாடான அமெரிக்காவிலும், பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். என்ன இவர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுப்பார்கள்.

இவ்வாறு பொருட்ச்செல்வம் இல்லாதவர்களுக்கு எனது சிறிய பார்வையில் எவ்வாறு Beggersவாழ்வளிக்கலாம் என்று பார்க்கலாம். தமிழகத்தில், நிறைய மக்கள் இலவசமாக வேட்டி சேலைகள் தருகிறார்கள். இவர்களிடம் ஏன் போய் சேர்வதில்லை? நிறைய இடங்களில் அன்ன தானம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஏன் உணவு இல்லை?

பல அரசாங்க முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் தமிழகத்திலே இருக்கிறது. பிச்சைக்காரர்களுக்கு ஏன் இங்கு அடைக்கலம் இல்லை (அனுமதி இல்லையோ?).

இவர்களின் பிரதினிதியாக ஒரு இயக்கம் அரசாங்கம் நடத்தினால் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் "உதவும் கரங்கள்", "சிவானந்தா ஆசிரமம்" என்று நிறைய அமைப்புகள் இருக்கின்றன. இதற்கு அரசாங்கம் உதவிகின்றது. இப்படி ஒரு சில இடங்களில் இருப்பதால் மற்ற இடங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இங்கு செல்ல கூட பணவசதி இல்லாமல் இருக்கிறார்கள். நிறைய பேருந்துகள் வைத்து, இவர்களை ஒன்று திரட்டி, அந்த அந்த இல்லங்களில் சேர்க்கலாம். இவர்களுக்கு இந்த இல்லங்களில் குறைந்த பட்சம் மூன்று வேலை உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இங்கு கிடைத்து விடும். அங்கேயே இவர்கள் (முதியோர்கள் தவிர) எதாவது வேலைப்பார்க்கலாம். இவர்களுக்கு வாக்காளர்கள் அட்டைக் கொடுத்து, அரசியல்வாதிகள் ஓட்டு வாங்களாமே :))

இந்த இடங்களில் இட வசதி இல்லாவிட்டால், ஒவ்வொறு தொகுதியிலும், அந்த தொகுதி Beggersஎம்.எல்.ஏ, ஒரு வீட்டைக்கட்ட வேண்டும். உதாரனத்திற்கு, ஒரு தொகுதியில், 10 பிச்சைக்காரர்கள் இருந்தால், 600 சதுர அடியில் நீளமான ஒரு ஹால் மற்றும் கழிப்பிடங்களுடன் ஒரு வீடு (குடுசையாக இருந்தாலும் போதுமே!). ரேஷனில் அரிசி இவர்களுக்கு தரலாம். 10 பிச்சைக்காரர்களில், சில பேர், சமயலுக்கும், சில பேர் வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், இன்னும் சில பேருக்கு எதாவது கைத்தொழில் கற்றுக் கொடுத்து (பூ கட்டுவதோ (அ) தோட்ட வேலை செய்வதோ) வாழவைக்கலாம். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் கொடுத்து, உழைப்பையும் பெற்றுக் கொண்டால், பிச்சை எடுத்து தான் வாழவேண்டும் என்ற இவர்களின் நிலையை மாற்றலாம்.

குழந்தைகள், சிறுவர், சிறுமியர் இவர்களை அரசாங்க பள்ளிக்கு அனுப்பலாம். தாய்மார்களுக்கு அங்கேயே வேலை தரலாம். இலவசமாக வேட்டி சேலை மற்றும் அன்ன தானம் கொடுக்க நினைக்கும் மக்கள், இந்த இல்லங்களுக்கு சென்று தானம் செய்யலாம்.வயதான உழைக்க முடியாத முதியோர்களை, இந்த இடத்தில் நன்கு ஓய்வு எடுக்க செய்யலாம். சில உணவு விடுதிகளில் மற்றும் கல்லூரி விடுதிகளிலும் நிறைய உணவு மீதமாகிறது. அந்த உணவைக்கூட இந்த மாதிரி இல்லங்களுக்கு தரலாம். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 3 அல்லது 5 நபர்களை அரசாங்கமே நல்ல சம்பளத்துடன் நியமித்தால், இந்த மாதிரி ஆதவற்றோர் இல்லத்தில் பிச்சை எடுக்கும் ஏழை மக்கள் சாந்தியுடன் வாழ்வார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதை அரசாங்கமோ அல்லது தனியரோ செயலாம். அரசாங்க பள்ளிகளில் இலவச கல்வி, அரசாங்க மருத்துவமனையில் இலவச சிகிச்சை, ஆதரவற்றோர் இல்லங்களில் உணவும் இருப்பிடமும் என்று இப்படி அடிப்படை வசதிகள் அரசு தம் மக்களுக்கு செய்துவிட்டால், பிச்சை ஏன் எடுக்க போகிறார்கள்?

இவர்களுக்கு ஊக்கமளிக்க அந்த தொகுதியின் மக்கள் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் Beggersஇருக்கிறார்கள். அவர்கள் மாதம் ஒரு சிறிய தொகை $1 என்று கொடுத்தாலும் அது இவ்வாறான இல்லங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (நான் கொடுக்க தயார் :)). இவ்வாறு வேலைப்பார்க்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ரு.1/- கொடுத்தாலே பிச்சைக்காரர்கள் வீதிகளில் பிச்சை எடுத்து வாழாமல், பொது இல்லங்களில் வாழ்வார்கள்.

நம் மக்கள் அதுவும் நிறைய சம்பளம் வாங்கும் மக்கள் ஏழை மக்களுக்கு தம்மால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதை செயல்படுத்த அவர்கள் வேலைப்பார்க்கும் அலுவலகமே விருப்பப்பட்டோர் சம்பலத்தில் மாதம் ஒரு ரூபாய் (அ) ஒவ்வொருவர் விருப்பப்படும் தொகையை பிடித்து, இந்த இல்லங்களுக்கு கொடுக்கலாம். இவ்வாறான சிறு துளிகள் நாடெங்கும் பெரு வெள்ளமாக மாறும்.

தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் பிச்சைக் காரர்கள் இருக்கிறார்கள். 5 அல்லது 10 ஊருக்கு ஒரு Beggersஆதரவற்றோர் இல்லம் அமைப்பதர்க்கு ஒவ்வொரு ஊரிலும் (அ) தொகுதியிலும் அமைக்கலாம். மாதம் $ 1 (அ) 1 ப்வுன்ட் (அ) ரு 1 (அ) தமிழகத்தின் மீது பற்றுள்ள மக்கள் எந்த நாட்டிலிருந்தாலும் மாதத்தில் மீதி சில்லரையாக இருக்கும் பணத்தை எளிமையான முறையில் வலைப்பு மூலமாகவோ அல்லது வங்கி மூலமாகவோ (அ) காசோலை மூலமாகவோ அனுப்ப அரசாங்கமோ (அ) அரசாங்க உதவியுடன் ஒரு நம்பகமான தனியார் நிறுவனமோ திட்டம் வகுத்தால், கண்டிப்பாக பிச்சைக்காரர்களை நம் நாட்டில் வாழவைக்காலம். பொது மக்களும், கோவில்கலின் உண்டியலில் போடும் சில்லரையை, இந்த இல்லங்களின் உண்டியலில் போட்டால் இன்னும் அதிக புன்னியம் பெறுவார்கள்.

அரசாங்கம் மூன்று வேலை உணவு, உடுத்த உடை, இருக்க இடம் கொடுக்கிறதே, சும்மா இருக்கும் நேரங்களில், சாலை ஓரமாக பிச்சை எடுத்து நாளு காசு சேர்க்கலாம் என்று நினைக்கும் சோம்பேரிகளை என்ன தான் செய்வது :))

 

13. தமிழக பொது இடங்களில் கழிப்பிடம்.

toiletsபோன முறை கூவம் பற்றி, இந்த முறை கழிப்பிடம் பற்றி என ஒரே கலீஜா எழுதுகிறேன் என்று சிந்தனையா? :)
என்ன செய்வது, துர் நாற்றத்தால் பாதிக்க பட்டவளாயிற்றே.

பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவது நம் மக்களின் வழக்கமாயிற்று. இவ்வாறு பயன் படுத்தும் மக்களிடம் "கழிப்பிடம் ஏன் பயன் படுத்த கூடாது ?" என்றால், "ஆத்திரத்தை அடக்கலாம்...ஆனா..." என்று ஆரம்பித்துவிடுவார்கள் :).

பேருந்து நிலையங்களில் சொல்லவே வேண்டாம். கட்டண கழிப்பிடம் என்று ரு.1 க்கு அனுமதிப்பார்கள். உள்ளே ஒரு குவளை கூட இருக்காது. காலியான பெயின்ட் டப்பா தான் இருக்கும். குழாய் இருக்காது, தொட்டியில் தண்ணீர் இருக்கும். தண்ணீர் எடுக்கும் போது, டப்பா கீழ் ஓட்டை வழியாக பாதி நீர் காலியாகி விடும். ம்ம்ம்...எத்தனை ட்ரிப் அடிப்பது? ஒரு நிம்மதி வேண்டாமா? இது கூட பரவாயில்லை. பொது கழிப்பிடத்தின் நிலைமையை யோசித்து பாருங்கள். 50 அடி தூரத்திலிருந்தே வீசும் (வேதியலில் சொல்வது போல் "a pungent smell of amonia" :) ). மூச்சை இழுத்து பிடித்து பழகிக் கொள்ள இதுவா இடம்.

சில இடங்களில் "இங்கு சிறுநீர் கழிப்பவர்கள் நாய்க்கு பிறந்தவர்கள்" என சுவற்றில் எழுதியிருக்கும். இது மக்களுக்கு படிக்க தெரிந்தால் தானே ? :). வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு வேலைத் தர, அரசு நல்ல நவீன கழிப்பிடங்களை கட்டினால், நிறைய பேருக்கு வேலைத் தரலாம். இவர்களுக்கு ஒரே மாதிரியான உடை, நல்ல சம்பளம், சுத்தம் செய்வதற்கு நல்ல சாதனங்கள் கொடுத்தால், அவர்களும் சலிக்காமல் வேலை செய்வார்கள். அரசாங்கம் இந்த மாதிரி ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இதையும் தனியாரிடம் கொடுத்தால், ரு. 5 கு எல்லா கழிப்பிடமும் கட்டண கழிப்பிடமாகிவிடும். வழக்கம் போல் மக்களும் பொது இடங்களையே பயன் படுத்துவார்கள்.

வருங்காலத்தில், சாக்கடை கழிவு நீரிலிருந்து, எரி பொருள் எடுக்க போகிறார்கள். இதற்கு மக்களால் முடிந்தது, கழிப்பிடத்தையாவது பயன்படுத்தலாம். பொது இடங்களில் உரம் போட்டு என்ன பயன் :)

பொது இடங்களிலும் முக்கியமாக சுற்றுலா இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் பெரிய நவீன கழிப்பிடம் அமைத்தால், மக்கள் கண்டிப்பாக முறையாக பயன்படுத்துவார்கள், நோய் தொற்றுதலும் இருக்காது.

This page is powered by Blogger. Isn't yours?