16. பெருங்காயம்!!!

Asafoetida
நீண்ட நாட்களாக பெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று ஒரு கேள்வி மனதிலே இருந்தது. இன்று தான் இனயத்திலே தேடி தெரிந்துக்கொண்டேன். உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

பெருங்காயம் "ஃபெருலா ஃபொட்டிடா" (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது. இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது.

வரலாறு:
டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று அழைக்கப்படுகிறது.

Asafoetidaஇதன் பயன்கள்:
எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க :)).

 

15. வேலை வேலை வேலை.

busy
கொஞ்ச நாட்களாக வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் போலவும் "பிசி" என்று சொல்ல மனமில்லை. எல்லாவற்றிர்க்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே என் ஆசை. நீண்ட நாட்களாக ப்ளாக் எழுதவில்லை (என்னாத்த எழுதுறது :). இனிமேல் எழுதுகிறேன். மறக்காமல் படிங்க.

வாழ்க வளமுடன்!! (ப்ளாக் படிப்பவர்களுக்கு :))

This page is powered by Blogger. Isn't yours?