16. பெருங்காயம்!!!

Asafoetida
நீண்ட நாட்களாக பெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று ஒரு கேள்வி மனதிலே இருந்தது. இன்று தான் இனயத்திலே தேடி தெரிந்துக்கொண்டேன். உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

பெருங்காயம் "ஃபெருலா ஃபொட்டிடா" (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது. இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது.

வரலாறு:
டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று அழைக்கப்படுகிறது.

Asafoetidaஇதன் பயன்கள்:
எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க :)).

விமரிசனங்கள்

Its a good information Nariya. I knew that we are getting it from tree but I didn't know these much details.
You are appreciated for your good work.
Keep it up and keep posted.
 
வாங்க பார்த்தி.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி.

எனக்கும் இது மரத்திலிருந்து வருகிறது என்று தெரியும். ஆனால் இது வேரிலிருக்கும் பசையிலிருந்து வருகிறது என்பது எனக்கும் புதிய தகவலே.

அடிக்கடி வாங்க.
நன்றி!!
 
//எனக்கும் இது மரத்திலிருந்து வருகிறது என்று தெரியும். ஆனால் இது வேரிலிருக்கும் பசையிலிருந்து வருகிறது என்பது எனக்கும் புதிய தகவலே.//

எனக்கும் இது புதிய தகவல்தான்.
நன்றி நரியா
 
நான்கூட இவ்வளவு காலமாக இது ஏதோ ஒரு இரசாயண பொருள் என்றே நினைத்திருந்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
 
நன்றி துளசி மற்றும் மாசிலா. வாயு தொல்லை தாங்க முடியாமல் தான் இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்தேன்:))
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?