14. பிச்சைக்காரர்களை வாழவைப்பது எப்படி?

நமது ஊரில் பிச்சைக்காரர்கள் ஏராளம். கோயில்களின் வாசலில் வயதான முதியோர்கள், Beggersபேருந்து நிலையங்களில் சிறு குழந்தைகள், சாலை ஓரங்களிலும், நடுவிலும், தாய்மார்கள் கை குழந்தைகள், ஊனமுற்றோர்கள், தொழு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இப்படி ஏராளமான பிச்சைக்காரர்கள். தெருக்களில் பாடியும், சாலை ஓரத்திலே ஓவியம் தீட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இந்த அவசர உலகத்தில், இவற்றை ரசித்து ஒரு சிலரே காசு கொடுப்பார்கள். அந்த காசால் ஒரு முறை கூட வயிறு நிறைய சாப்பிட முடியாது இவர்களால்.

சுற்றுளா இடங்களில் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டு மக்களிடம் வற்புருத்தி பிச்சை கேட்ப்பதும் அவர்கள் காலில் விழுவதும், கோபக்கார மக்களும் அவர்களை இழிவாக பேசுவதும், இன்னும் சிலர் இவர்களை உதைப்பதும்....என்ன கொடுமை என்ன கொடுமை. உழைத்து வாழாமல் இப்படி பிச்சை எடுத்து வாழ்கிறார்களே என்று பல பேர் கோபப்படலாம்.
வல்லரசு நாடான அமெரிக்காவிலும், பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். என்ன இவர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுப்பார்கள்.

இவ்வாறு பொருட்ச்செல்வம் இல்லாதவர்களுக்கு எனது சிறிய பார்வையில் எவ்வாறு Beggersவாழ்வளிக்கலாம் என்று பார்க்கலாம். தமிழகத்தில், நிறைய மக்கள் இலவசமாக வேட்டி சேலைகள் தருகிறார்கள். இவர்களிடம் ஏன் போய் சேர்வதில்லை? நிறைய இடங்களில் அன்ன தானம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஏன் உணவு இல்லை?

பல அரசாங்க முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் தமிழகத்திலே இருக்கிறது. பிச்சைக்காரர்களுக்கு ஏன் இங்கு அடைக்கலம் இல்லை (அனுமதி இல்லையோ?).

இவர்களின் பிரதினிதியாக ஒரு இயக்கம் அரசாங்கம் நடத்தினால் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் "உதவும் கரங்கள்", "சிவானந்தா ஆசிரமம்" என்று நிறைய அமைப்புகள் இருக்கின்றன. இதற்கு அரசாங்கம் உதவிகின்றது. இப்படி ஒரு சில இடங்களில் இருப்பதால் மற்ற இடங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இங்கு செல்ல கூட பணவசதி இல்லாமல் இருக்கிறார்கள். நிறைய பேருந்துகள் வைத்து, இவர்களை ஒன்று திரட்டி, அந்த அந்த இல்லங்களில் சேர்க்கலாம். இவர்களுக்கு இந்த இல்லங்களில் குறைந்த பட்சம் மூன்று வேலை உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இங்கு கிடைத்து விடும். அங்கேயே இவர்கள் (முதியோர்கள் தவிர) எதாவது வேலைப்பார்க்கலாம். இவர்களுக்கு வாக்காளர்கள் அட்டைக் கொடுத்து, அரசியல்வாதிகள் ஓட்டு வாங்களாமே :))

இந்த இடங்களில் இட வசதி இல்லாவிட்டால், ஒவ்வொறு தொகுதியிலும், அந்த தொகுதி Beggersஎம்.எல்.ஏ, ஒரு வீட்டைக்கட்ட வேண்டும். உதாரனத்திற்கு, ஒரு தொகுதியில், 10 பிச்சைக்காரர்கள் இருந்தால், 600 சதுர அடியில் நீளமான ஒரு ஹால் மற்றும் கழிப்பிடங்களுடன் ஒரு வீடு (குடுசையாக இருந்தாலும் போதுமே!). ரேஷனில் அரிசி இவர்களுக்கு தரலாம். 10 பிச்சைக்காரர்களில், சில பேர், சமயலுக்கும், சில பேர் வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், இன்னும் சில பேருக்கு எதாவது கைத்தொழில் கற்றுக் கொடுத்து (பூ கட்டுவதோ (அ) தோட்ட வேலை செய்வதோ) வாழவைக்கலாம். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் கொடுத்து, உழைப்பையும் பெற்றுக் கொண்டால், பிச்சை எடுத்து தான் வாழவேண்டும் என்ற இவர்களின் நிலையை மாற்றலாம்.

குழந்தைகள், சிறுவர், சிறுமியர் இவர்களை அரசாங்க பள்ளிக்கு அனுப்பலாம். தாய்மார்களுக்கு அங்கேயே வேலை தரலாம். இலவசமாக வேட்டி சேலை மற்றும் அன்ன தானம் கொடுக்க நினைக்கும் மக்கள், இந்த இல்லங்களுக்கு சென்று தானம் செய்யலாம்.வயதான உழைக்க முடியாத முதியோர்களை, இந்த இடத்தில் நன்கு ஓய்வு எடுக்க செய்யலாம். சில உணவு விடுதிகளில் மற்றும் கல்லூரி விடுதிகளிலும் நிறைய உணவு மீதமாகிறது. அந்த உணவைக்கூட இந்த மாதிரி இல்லங்களுக்கு தரலாம். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 3 அல்லது 5 நபர்களை அரசாங்கமே நல்ல சம்பளத்துடன் நியமித்தால், இந்த மாதிரி ஆதவற்றோர் இல்லத்தில் பிச்சை எடுக்கும் ஏழை மக்கள் சாந்தியுடன் வாழ்வார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதை அரசாங்கமோ அல்லது தனியரோ செயலாம். அரசாங்க பள்ளிகளில் இலவச கல்வி, அரசாங்க மருத்துவமனையில் இலவச சிகிச்சை, ஆதரவற்றோர் இல்லங்களில் உணவும் இருப்பிடமும் என்று இப்படி அடிப்படை வசதிகள் அரசு தம் மக்களுக்கு செய்துவிட்டால், பிச்சை ஏன் எடுக்க போகிறார்கள்?

இவர்களுக்கு ஊக்கமளிக்க அந்த தொகுதியின் மக்கள் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் Beggersஇருக்கிறார்கள். அவர்கள் மாதம் ஒரு சிறிய தொகை $1 என்று கொடுத்தாலும் அது இவ்வாறான இல்லங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (நான் கொடுக்க தயார் :)). இவ்வாறு வேலைப்பார்க்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ரு.1/- கொடுத்தாலே பிச்சைக்காரர்கள் வீதிகளில் பிச்சை எடுத்து வாழாமல், பொது இல்லங்களில் வாழ்வார்கள்.

நம் மக்கள் அதுவும் நிறைய சம்பளம் வாங்கும் மக்கள் ஏழை மக்களுக்கு தம்மால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதை செயல்படுத்த அவர்கள் வேலைப்பார்க்கும் அலுவலகமே விருப்பப்பட்டோர் சம்பலத்தில் மாதம் ஒரு ரூபாய் (அ) ஒவ்வொருவர் விருப்பப்படும் தொகையை பிடித்து, இந்த இல்லங்களுக்கு கொடுக்கலாம். இவ்வாறான சிறு துளிகள் நாடெங்கும் பெரு வெள்ளமாக மாறும்.

தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் பிச்சைக் காரர்கள் இருக்கிறார்கள். 5 அல்லது 10 ஊருக்கு ஒரு Beggersஆதரவற்றோர் இல்லம் அமைப்பதர்க்கு ஒவ்வொரு ஊரிலும் (அ) தொகுதியிலும் அமைக்கலாம். மாதம் $ 1 (அ) 1 ப்வுன்ட் (அ) ரு 1 (அ) தமிழகத்தின் மீது பற்றுள்ள மக்கள் எந்த நாட்டிலிருந்தாலும் மாதத்தில் மீதி சில்லரையாக இருக்கும் பணத்தை எளிமையான முறையில் வலைப்பு மூலமாகவோ அல்லது வங்கி மூலமாகவோ (அ) காசோலை மூலமாகவோ அனுப்ப அரசாங்கமோ (அ) அரசாங்க உதவியுடன் ஒரு நம்பகமான தனியார் நிறுவனமோ திட்டம் வகுத்தால், கண்டிப்பாக பிச்சைக்காரர்களை நம் நாட்டில் வாழவைக்காலம். பொது மக்களும், கோவில்கலின் உண்டியலில் போடும் சில்லரையை, இந்த இல்லங்களின் உண்டியலில் போட்டால் இன்னும் அதிக புன்னியம் பெறுவார்கள்.

அரசாங்கம் மூன்று வேலை உணவு, உடுத்த உடை, இருக்க இடம் கொடுக்கிறதே, சும்மா இருக்கும் நேரங்களில், சாலை ஓரமாக பிச்சை எடுத்து நாளு காசு சேர்க்கலாம் என்று நினைக்கும் சோம்பேரிகளை என்ன தான் செய்வது :))

விமரிசனங்கள்

நரியா!

கொஞ்ச நாள் தேசாந்திரம் போய்ட்டு வறதுகுள்ள நிறைய எழுதிதள்ளிட்டிங்க போல.

தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டீர்கள் ,ஆனால் யாரும் பிச்சைக்காரனாக பிறப்பதில்லை. சமுதாயத்தால் தான் உருவாக்கப்படுகிறார்கள். என்பதை மறந்து விட்டீர்களே.வருமானம் இல்லாத நிலையில் பசி எடுக்கும் போது வலியவன் திருடன் ஆகிறான். எளியவன் பிச்சை எடுக்கிறன் என்பதே உண்மை.

பிச்சை எடுக்கும் சூழல் ஏன் உருவாகிறது எனப்பார்ப்போம்.

கிராமத்தில் விவசாயம் செய்கிறார்கள் விவசாயத்தில் நட்டம் வந்து கடனுக்கு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் ஆகி பிழைப்பு தேடி பட்டிணம் வரும் போது வேலை ஏதும் கிடைக்காமல், தற்காலிகமாக பிச்சை எடுத்து பின்னர் அதுவே நிரந்தரம் ஆகி விடுகிறது.

அல்லது ஏதேனும் தொழில் செய்து நொடித்து போய் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருகிறார்கள்.

வயதான முதியோர்களை அவர்களது வாரிசுகள் கவனிக்காமல் , துன்புறுத்தும் போது வீட்டை விட்டு வெளியேரி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

வீட்டை விட்டு கோவித்துக்கொண்டு ஓடி வரும் சிறுவர்கள் பசிக்கு பயந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

இதுப் போன்ற பிச்சை எடுக்க நிர்பந்திக்கும் அடிப்படை காரணிகளை பார்த்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விடுத்து நீங்கள் சொல்வது போல செய்தால் பிரச்சினை தீராது.

ரூபாய் இரண்டுக்கு அரிசி போடுவதாக சொன்னால் அதனையே கிண்டல் செய்யும் அறிவு ஜீவிகள் இருக்கும் போது பிச்சைக்காரர்களுக்கு மாதம் பணம் தரலாம் என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா?

குறைந்த வருமானத்தில் ஒருவனால் கவுரவமாக வாழ கூடிய சூழல் இருந்தாலே பிச்சை எடுக்க முன்வர மாட்டார்கள். அது போன்ற ஒரு செயல் தான் மலிவான விலையில் அரிசி தருவது. எனவே ஒரு நாளைக்கு 10 ரூபாய் சம்பாதித்தால் கூட அவனால் ஒரு கிலோ அரிசி வாங்கி சாப்பிட முடியும் அல்லாவா?

உங்களுக்கு தெரிந்து இருக்க்க வாய்ப்பு இல்லை. பிச்சைக்காரர்களுக்காக ஒரு மறுவாழ்வு திட்டம் என்று அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அவர்கள் தங்க இடம் அளித்து உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.இந்த திட்டம் 1970 களிலேயே கொண்டுவரப்பட்டது. அங்கு இருப்பது சிறைச்சாலையில் இருப்பது போல் உள்ளது, உணவும் சுவையாக இல்லை எனப்பெரும்பாலோர் வெளியில் வந்து விடுகிறார்கள்.

இப்பொழுதும் ஆதரவு அற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் என சமூக நலத்துறையால் நடத்தப்படுகிறது.சாலைல் திரியும் சிறுவர்களுக்கென கூர் நோக்கு இல்லங்கள் உள்ளன ஆனால் அதனைப் பயன்படுத்த யாரும் முன்வருவதில்லை. காரணம் அரசால் நிர்வாகம் செய்யப்படும் இடங்களில் அருசுவை உணவும், குளிரூட்டிய அறையுமா தருவார்கள் எனவே அவை எல்லாம் பெயரளவில் செயல் பட்டு வருகின்றன்.

வாரிசு இல்லாத முதியோர்களுக்கென அரசு மாதம் ஒரு உதவி தொகையும் வழங்கி வருகிறது, இது எல்லாம் அனைவருக்கும் கிடைக்கும் என சொல்ல முடியாது, ஆனால் இது போன்ற எந்த முயற்சியும் இல்லாதது போல புதிதாக செய்ய வேண்டும் என தாங்கள் ஒரு கட்டுரை எழுதி இருப்பதால் சொன்னேன்.

புதிதாக பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி , அனைவருக்கும் வேலைக்கிடைக்க அரசு உதவினாலே போதும்.
 
வாங்க வவ்வால். வணக்கம்.

பிச்சைக்காரர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த கட்டுரை எழுதும் போது, இவற்றை நான் நினைக்கவில்லை. இங்கு குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி.

//வருமானம் இல்லாத நிலையில் பசி எடுக்கும் போது வலியவன் திருடன் ஆகிறான். எளியவன் பிச்சை எடுக்கிறன் என்பதே உண்மை.
//
இந்த கருத்தை நான் ஏற்கிறேன்.

//உங்களுக்கு தெரிந்து இருக்க்க வாய்ப்பு இல்லை. பிச்சைக்காரர்களுக்காக ஒரு மறுவாழ்வு திட்டம் என்று அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அவர்கள் தங்க இடம் அளித்து உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.இந்த திட்டம் 1970 களிலேயே கொண்டுவரப்பட்டது. அங்கு இருப்பது சிறைச்சாலையில் இருப்பது போல் உள்ளது, உணவும் சுவையாக இல்லை எனப்பெரும்பாலோர் வெளியில் வந்து விடுகிறார்கள்.
//
ஆம் இது எனக்கு புதிய தகவல். கவுரவமாக வாழ அரசே வழி செய்யும் போதும் கூட அருஞ்சுவை உணவிற்காக பிச்சை எடுக்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம்.

இந்த மறுவாழ்வுத் திட்டம் தமிழகமெங்கும் இறுக்கிறதா??. பல நாட்கள் பசியால் வாடும் பிச்சைக்கார்களுக்கு இந்த திட்டங்கள் பற்றி தெரியுமா??

இதற்காகத்தான், அந்த அந்த ஊர் அரசாங்க அதிகாரிகள் யாராவது, இவர்களை அந்த அந்த இல்லங்களில் சேர்க்க வேண்டும் என எழுதினேன்.
/
/இப்பொழுதும் ஆதரவு அற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் என சமூக நலத்துறையால் நடத்தப்படுகிறது.சாலைல் திரியும் சிறுவர்களுக்கென கூர் நோக்கு இல்லங்கள் உள்ளன ஆனால் அதனைப் பயன்படுத்த யாரும் முன்வருவதில்லை. காரணம் அரசால் நிர்வாகம் செய்யப்படும் இடங்களில் அருசுவை உணவும், குளிரூட்டிய அறையுமா தருவார்கள் எனவே அவை எல்லாம் பெயரளவில் செயல் பட்டு வருகின்றன்.
//

வெளியில் சென்று, பல நாள் பசியால் வாடுவதற்கு பதிலாக, இந்த இல்லங்களில் இருந்து, ஏதாவது தொழிற்கல்வியை கற்று அவரவர் வாழ்வை அமைத்துக் கொள்ளலாமே.

// வாரிசு இல்லாத முதியோர்களுக்கென அரசு மாதம் ஒரு உதவி தொகையும் வழங்கி வருகிறது, இது எல்லாம் அனைவருக்கும் கிடைக்கும் என சொல்ல முடியாது, ஆனால் இது போன்ற எந்த முயற்சியும் இல்லாதது போல புதிதாக செய்ய வேண்டும் என தாங்கள் ஒரு கட்டுரை எழுதி இருப்பதால் சொன்னேன்.
//

எல்லோருக்கும் உதவி தொகை தராத அரசாங்கம், முதியவர்களுக்கு மூன்று வேலை உணவு, இருக்க இடம் கொடுத்தாலே, அவர்கள், தமது மீதிய நாட்களை நிம்மதியாக வாழ்வார்கள். இந்த கட்டுரையில், பல அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகள் இருந்தும் அது பிச்சை எடுக்கும் மக்களுக்கு போய் சேர சில வழிகளை கூறியிருக்கிறேன். புதிய திட்டங்களோ பழைய திட்டங்களோ, பிச்சைக்காரர்கள், பிச்சை எடுக்கும் தொழிலை விட்டு விட்டு, சுய தொழில் அல்லது வேலை செய்து வாழ அரசாங்கம் தீவிரமாக இவர்களுக்கு விழிப்புணர்வும், உதவியும் கொடுத்தால், பிச்சைக்காரர்கள் என்னும் வார்த்தையே தமிழகராதியில் எடுத்து விடலாம்:).

//புதிதாக பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி , அனைவருக்கும் வேலைக்கிடைக்க அரசு உதவினாலே போதும்.
//

முற்றிலும் உண்மை. வேலைக் கிடைக்கும் வரை அரசாங்கம், இவர்களுக்கு ஊக்க தொகை (அ) உணவும் அடைக்கலமும் கொடுத்தால், பிச்சை எடுக்காமல் இருப்பார்கள் (சில வல்லரசு நாடுகளில் அரசாங்கம், வேலை கிடைக்கும் வரை வாலிபர்களுக்கு ஊக்க தொகை தருகிறார்கள்).

நன்றி!!
 
வாங்க கீதா. வணக்கம்.

நீங்க சொல்வது உண்மைதான். மன மாற்றம் தேவை. அதற்கு சமூக சேவகர்கள் ஏதாவது முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.

நன்றி
 
WOW aathaa. Will soon comment in thamiz.
 
வாங்க நாகா.
மிக அருமையாக தங்கள் கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதைப்போல் நாம் அனைவரும் சூழ்நிலைக் குற்றவாளிகள் ஆகிறோம்.

ஆனால் நான்கு ஐந்து நாட்களாக, வீதியில் ஒரு வாய் உணவுக் கூட சாப்பிடாமல் பட்டினி இருக்கும் சிறு குழந்தைகளின் நிலைமையைப் பார்க்கும் போது, இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சொந்த பந்தத்தை குறை சொல்வதா அல்லது இவர்களுக்கு உணவு கொடுக்க மறுக்கும் மக்களை குறை சொல்வதா, இல்லை இவர்கள் இப்படியே சாகட்டும் என்று கண்டுக் கொள்ளாமல் இருக்கும் அரசாங்கத்தை குறை சொல்வதா?.

எத்தனையோ இடங்களில் அன்னதானம் நடந்தும் இவர்களுக்கு ஏன் உணவு இல்லை என்பதே என் வினா. நான் முன்பே கூறியதைப் போல தனி மனிதர்களும் அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா பிச்சைக்காரர்களையும் போய் சேர்வதில்லை என்பதே என் கருத்து.

"கொடுமை கொடுமை வறுமை மிகக் கொடுமை" என்று ஒளவையார் கூறுவதுப் போல அடிப்படை வசதிகளை அந்த அந்த அரசாங்கம் அவர்களின் மக்களுக்கு கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும் ப்ரார்த்தனையும்.

கருத்துக்களுக்கு மிக நன்றி நாகா. அடிக்கடி வாங்க.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?