13. தமிழக பொது இடங்களில் கழிப்பிடம்.

toiletsபோன முறை கூவம் பற்றி, இந்த முறை கழிப்பிடம் பற்றி என ஒரே கலீஜா எழுதுகிறேன் என்று சிந்தனையா? :)
என்ன செய்வது, துர் நாற்றத்தால் பாதிக்க பட்டவளாயிற்றே.

பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவது நம் மக்களின் வழக்கமாயிற்று. இவ்வாறு பயன் படுத்தும் மக்களிடம் "கழிப்பிடம் ஏன் பயன் படுத்த கூடாது ?" என்றால், "ஆத்திரத்தை அடக்கலாம்...ஆனா..." என்று ஆரம்பித்துவிடுவார்கள் :).

பேருந்து நிலையங்களில் சொல்லவே வேண்டாம். கட்டண கழிப்பிடம் என்று ரு.1 க்கு அனுமதிப்பார்கள். உள்ளே ஒரு குவளை கூட இருக்காது. காலியான பெயின்ட் டப்பா தான் இருக்கும். குழாய் இருக்காது, தொட்டியில் தண்ணீர் இருக்கும். தண்ணீர் எடுக்கும் போது, டப்பா கீழ் ஓட்டை வழியாக பாதி நீர் காலியாகி விடும். ம்ம்ம்...எத்தனை ட்ரிப் அடிப்பது? ஒரு நிம்மதி வேண்டாமா? இது கூட பரவாயில்லை. பொது கழிப்பிடத்தின் நிலைமையை யோசித்து பாருங்கள். 50 அடி தூரத்திலிருந்தே வீசும் (வேதியலில் சொல்வது போல் "a pungent smell of amonia" :) ). மூச்சை இழுத்து பிடித்து பழகிக் கொள்ள இதுவா இடம்.

சில இடங்களில் "இங்கு சிறுநீர் கழிப்பவர்கள் நாய்க்கு பிறந்தவர்கள்" என சுவற்றில் எழுதியிருக்கும். இது மக்களுக்கு படிக்க தெரிந்தால் தானே ? :). வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு வேலைத் தர, அரசு நல்ல நவீன கழிப்பிடங்களை கட்டினால், நிறைய பேருக்கு வேலைத் தரலாம். இவர்களுக்கு ஒரே மாதிரியான உடை, நல்ல சம்பளம், சுத்தம் செய்வதற்கு நல்ல சாதனங்கள் கொடுத்தால், அவர்களும் சலிக்காமல் வேலை செய்வார்கள். அரசாங்கம் இந்த மாதிரி ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இதையும் தனியாரிடம் கொடுத்தால், ரு. 5 கு எல்லா கழிப்பிடமும் கட்டண கழிப்பிடமாகிவிடும். வழக்கம் போல் மக்களும் பொது இடங்களையே பயன் படுத்துவார்கள்.

வருங்காலத்தில், சாக்கடை கழிவு நீரிலிருந்து, எரி பொருள் எடுக்க போகிறார்கள். இதற்கு மக்களால் முடிந்தது, கழிப்பிடத்தையாவது பயன்படுத்தலாம். பொது இடங்களில் உரம் போட்டு என்ன பயன் :)

பொது இடங்களிலும் முக்கியமாக சுற்றுலா இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் பெரிய நவீன கழிப்பிடம் அமைத்தால், மக்கள் கண்டிப்பாக முறையாக பயன்படுத்துவார்கள், நோய் தொற்றுதலும் இருக்காது.

விமரிசனங்கள்

Hi,
Those people you mentioned don't have a proper toilet to pee. Although Singapore we have full facility someone idiots still peeing in staircase, lifts and many other places. What can we say about these kind of people? Toilet or no toilet there must be few people still prefer to pee in public places.
 
Welcome and thanks for your comments thurgah.
// What can we say about these kind of people? Toilet or no toilet there must be few people still prefer to pee in public places.
//
You are true. People are not that much aware of the health hazards and you know the born laziness is also a factor for them to pee in public places.

Awareness should also be done along with expanded public toilets.

Thanks and please visit often!.
Naria!!
 
வணக்கம் குழந்தை,

முதல் வருகைக்கும் பினூட்டத்திற்லும் மிகவும் நன்றி.

நீங்கள் சொல்வது சரி.

படித்த நாகரிகமான மக்களே, குப்பை தொட்டியில் குப்பை போடாமல் இருப்பதும், சாலையில் உமிழ்வதும், சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதும் நிறைய பார்க்கின்றோம்.

அரசாங்கம் இதை தவிர்க்க நினைத்தால், முதலில், சாலை ஓரங்களில் சுமார் 100 அடிகளுக்கு ஒரு குப்பை தொட்டியும், நவீன கழிப்பிடங்களும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு பின், சாலையில் உமிழ்ந்தாலோ, சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தாலோ அல்லது குப்பை போட்டாலோ, இவ்வளவு கட்டணம் என்று சட்டங்கள் கொண்டுவரலாம்.

சிறப்பான எண்ணங்களுன் சிறப்பாக ஆட்சி செய்தால், சிறப்பாக மக்கள் வாழ்வார்கள் என்பது எனது தாழ்ந்த கருத்து.

நன்றி, மீண்டும் வருக
 
Its True in our Country..
But what we will do.
This is our common cluture.

Regards
Raghu.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?