9. பாஸ்தா பிரியாணி

வெளி நாடுகளில் பாஸ்தாவை சீஸ் (Cheese) அல்லது தக்காளி தொக்குடனோ சேர்த்து தான் பரிமாருவார்கள். நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி ஸ்பைசி பாஸ்தா பார்த்தோம். அடுத்து பாஸ்தா பிரியாணி இங்கே பார்ப்போம்.

செய்யும் நேரம்: 40 நிமிடங்கள்.

தேவையான பொருட்கள்:
1. பாஸ்தா - 2 கப்
2. கேரட் - 1/2 கப்
3. பீன்ஸ் - 1/2 கப்
4. பச்சை பட்டாணி - 1/4 கப்
5. பச்சை மிளகாய் - 2
6. தக்காளி - 1/4 கப் நறுக்கியது
7. வெங்காயம் - 1/4 கப் நறுக்கியது
8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. மஞ்ச தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு
11. சமையல் எண்ணை (அ) நெய் - 4 தேக்கரண்டி
12. லவங்கம் - 3
13. கொத்தமல்லி தழை - சிறிது
14. தண்ணீர் - 3 கப்

செய்முறை:
1. ஒரு குக்கரில் சிறிது எண்ணை (அ) நெய் விட்டு, காய்ந்ததும், லவங்கம் தாளித்து, பின் மஞ்ச தூள் போட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
2. வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
4. தண்ணீரை ஊற்றி பின் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5. கொதித்தவுடன், பாஸ்தாவை சேர்த்து, கிளறி குக்கரை 2 விசில் வரை விட வேண்டும்.
6. குக்கர் அழுத்தம் அடங்கியதும், பாஸ்தாவில், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாருங்கள்.

பின் குறிப்பு:
1. எண்ணையும் நெய்யும் கலந்தும் பயன்படுத்தலாம்.
2. பிரியாணி செந்நிறத்தில் வர வேண்டுமானால், கேசரி தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.
3. காலிஃப்ளவர் மற்றும் உருளை கிழங்கைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
4. பாஸ்தா பிரியாணிக்கு, ஒரு கப் பாஸ்தாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதுவே பாஸ்தா சூப் என்றால், 3 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் (ஒரே கல்ல ரெண்டு மாங்கா :)) )
5. இந்த மாதிரி சூப் செய்யும் போது, தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறிது சோளமாவையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

விமரிசனங்கள்

Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?