8. அடுத்த கன மழைக்கு தமிழகம் தயாரா?


போன வருடம் (2005) தமிழகத்தில் பெய்த தொடர் மழையை எவராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. கிட்ட தட்ட எல்லா ஏரிகளும், அணைகளும் நிரம்பிவிட்டன. இன்னும் சில வருடங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லையென்றாலும், அடுத்த கன மழையை தமிழகம் தாங்குமா என்று யோசிக்க வேண்டும். எவ்வளவு அழிவு அந்த மழையால். உயிர் அழிவு, வீடுகள் அழிவு, வயல்கள் அழிவு, ரயில் தண்டவாளங்கள் அழிவு, சாலைகள் அழிவு இன்னும் நிறைய!. போன அரசாங்கமும், சில ஆயிரம் கோடிகளை பாதிக்க பட்ட இடங்களை சரி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கவும் மத்திய அரசிடம் வாங்கினார்கள். அடுத்த கன மழையை சமாளிக்க என்ன முயற்சிகளை எடுத்தார்கள் என தெரியவில்லை. போன அரசாங்கத்தில், "மழை நீர் சேகரிப்புத்திட்டம்" என்று அறிமுகப்படுத்தியதால், ஒவ்வொரு வீட்டின் வெளியே சம்ப்பில் (Sump), நீரை சேகரித்தார்கள், தேவை பட்ட நேரங்களில் உபயோகித்தார்கள்.

அடுத்த கன மழையை சமாளிக்க நாம் இங்கே சில வழிகளை காண்போம்.
1. தமிழகம் எங்கும் நிறைய பூமி, விவசாயத்திற்கு பயன் படாமல் இருக்கின்றன. இந்த மாதிரியான பூமியில், ஏரிகளை வெட்டலாம். 5 (அ) 10 குக்கிராமங்களுக்கு ஒரு ஏரி என்ற விதம், தமிழகம் எங்கும் ஏரிகளை உருவாக்கலாம். ஏற்கனவே உள்ள ஏரிகளை விரிவாக்களாம்.

2. சுரங்க பாதையில் பெரிய குழாய்களை (Tunnels) வைத்து, எல்லா ஏரிகளையும் இணைக்கலாம் (ஊரெங்கும் சாலை போடும் போது சுரங்க பாதையில் குழாய் முடியாதா??). இந்தியா முழுவதும் நதிகளைத் தான் இன்னும் இணைக்க முடியவில்லை. தமிழகத்தில், ஏரிகளையாவது இணைத்து, மழை நீரை வீணாக கடலில் கலக்க விடாமல், விவசாயதிற்காவது உபயோக படுத்தலாம்.

3. பெரிய ஏரிகளுக்கு அணைகளை கட்டி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறாக செய்தால், சிங்கார சென்னைப் போல வனப்பு தமிழகம் என்று விளங்கும். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஏரிகள், ஓரத்தில் மரங்கள், பூங்காக்கள், படகு சவாரி. வழிப்போக்கருக்கு இளைப்பார சொர்கமாக இருக்கும் அல்லவா.
வேறேனும் கன மழையை சமாளிக்க வழிகள் இருந்தால் இங்கே பின்னோட்டதில் எழுதவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.

விமரிசனங்கள்

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குதுன்னு சொல்லுவாங்க...ஏங்க இதெல்லாம் நடக்கற காரியமா ? அடுத்த மழை எப்போ வருமோ ?
ஏதுங்க காலி இடம் நாட்டுல..ஏரி வெட்டும் அளவு ? ஒரு ஏரியோட பரப்பளவும் எவ்வளவு தெரியுமா ? ஏரிய எல்லாம் இணைக்கனும் என்றால் எப்படி இணைப்பது , அந்தரத்திலா ? யார் வீட்டு நிலத்தில் கால்வாய் வெட்டுவது ?
 
Hi Naria,

Its a good idea to think abt..

why cant we take a initiavite first in one district and c whether it is possible or not.

//ஒரு ஏரியோட பரப்பளவும் எவ்வளவு தெரியுமா ..யார் வீட்டு நிலத்தில் கால்வாய் வெட்டுவது ? //

Ravi sir, our govt have place to build samathuvapuram...IT Park...etc..like that it can find place for this also...

i feel it is the right time to do the POC (Proof of concept) now..as we have central support also.

Our water harvesting is considered as model in many states now.....

we can try to construct it in the places bought by our great politicians in their binami's name...(Press, Media will help to find such places easily)

Muyarchi thiruvinay aakum (in this case aagamalum pogalam)

But we should try...
Its a good idea to think abt..

Bye for now
Azaghi
 
வாங்க செந்தில் ரவி.
முதல் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் மிகவும் நன்றி.

ஏங்க, வீதி வீதிக்கு சாலை போடறாங்க இல்ல, அதுக்கு பக்கதிலே எதுஎதுக்கோ குழி தோண்டுறாங்க (தொலைபேசி கேபில், கேபில் டீ.வீ). அப்படியே சுரங்க குழாய்க்காகவும் இன்னும் ஒரே முறை தோண்டினால், அப்படியே ஏரிக்கு சேர்த்திடலாம் தானே.

//ஏதுங்க காலி இடம் நாட்டுல.. //

எத்தனையோ நிலங்கள் பொட்டல் காடாக இருக்குதுங்க. அது மட்டும் இல்லாம, மக்கள் தொகை அதிகமா இருக்கிற இடத்தில காலி நிலம் இல்லனா, காலியா இருக்கிற நிலத்தில ஏரி வெட்டிட்டு, சுரங்க குழாய்கள் மூலமாக இணைச்சிடலாம்.

ஒன்னுமே பன்னலனா, போன தடவ போல, பேருந்துகள் தண்ணிலே அடிச்சிட்டு போகும். நகர் முழுவதும், வெனிஸ் (Vennice) மாரி எல்லா மக்களும் படகுல தான் வேலைக்கு போகனும், இனி கட்ட போகுற எல்லா கட்டடங்களிலும், வீடுகளிலும், "Ground floor/Basement" காலியா தான் விடனும்.

சும்மாவா, கிட்ட தட்ட 2000 கோடி மத்திய அரசிடம் வாங்கினாங்களே, இது போல ஏதாவது செஞ்சா தாங்க உயிர் இழப்பையாவது குறைக்கலாம்.

ஆனா ஒன்னுங்க. நம்ம மக்கள், அரசாங்கத்தை ஏமாற்றி வேறு வழி இல்லாம, ஆறு நடுல வீடு கட்டினாங்க. போன மழைல எல்லாம் அடிசிட்டு பொய்டுச்சு. இப்ப ஏரி வெட்டினா, எல்லா ஏரியையும் படகு வீடா மாத்தாம இருந்தா சரி.
 
வாங்க அழகி.
//why cant we take a initiavite first in one district and c whether it is possible or not.
//

நீங்க சொல்வதூம் சரி தான். எல்லாவற்றிர்கும் "மாதிரி" (Model) ஒன்னு வேணும். அதிகமா பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் முதலில் கவனம் செழுத்தினால், நன்றாக இருக்கும்.

//we can try to construct it in the places bought by our great politicians in their binami's name...(Press, Media will help to find such places easily)//

ஹா ஹா ஹா ஹா..மிகவும் அருமையான யோசனை!

//Muyarchi thiruvinay aakum (in this case aagamalum pogalam)
//
ஒன்றும் இல்லாததற்கு ஏதோ ஒன்று பரவா இல்லை "Something is better than nothing" என நானும் நினைகிறேன்.

பின்னோட்டத்திற்கு மிகவும் நன்றி அழகி.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?