7. மூடநம்பிக்கைகளும் தற்போதய வாழ்வும்

மூடநம்பிக்கைகள் எல்லா நாடுகளிலுமே மக்களால் நம்பப்படும் ஒரு விஷயம். நாத்திகருக்கு மூடநம்பிக்கை ஆத்திகரோடு குறைவாகத்தான் இருக்கிறது. சில மூடநம்பிக்கைகளில் ஏதாவது ஒரு உட்கருத்து இருக்கும். பாமர கல்வி அறிவற்ற மக்களுக்கு சில விஷயங்களை நேரடியாக கூறினால், அவர்கள் அலட்சியமாக கருதுக்களை நிராகரித்து விடுவர். அவர்கள் கவனத்திற்காக உருவானவையே மூடநம்பிக்கைகள் என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு மூடநம்பிக்கைகும் "ஏன் இவ்வாறு" என்று கேள்வி எழுப்பினால், அப்போது உண்மை விளங்கும்.

சில மூடநம்பிக்கைகளை இங்கு காண்போம்.

1. பூனை குறுக்கே போனால் போன காரியம் நடக்காது.
பூனை பொதுவாக மனிதனுக்கு நண்பனாக கருதமாட்டார்கள். பூனை திருடி தான் பால் குடிக்கும். எந்த இந்து கடவுளும், பூனையை வாகனமாக வைக்கவில்லை. பூனையின் இயற்கை குணம் அறிந்து தான் இந்த நம்பிக்கை தோன்றியிருக்கும். விஞ்ஞான ரீதியாக இது உண்மை கிடையாது. பாவம் பூனைகள் :(.

2. நகத்தை வீட்டிலே வெட்டினால், லட்சுமி வராது.
வீட்டிலே நகம் வெட்டும் போது, இங்கு அங்கு என்று சிதறி விழும். நகம் சற்று கூர்மையாக இருக்கும். நடக்கும் போது காலில் குத்திவிடலாம். மற்றும் குழந்தை இருக்கும் வீட்டில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். தவழும் குழந்தைகள் தரையில் கிடைப்பதெல்லாம் வாயில் போட்டுக்கொள்ளும். இதை சோம்பேறிகளிடம் (அ) அஜாக்கிரதையான மக்களிடம் சொன்னால் கேட்ப்பார்களா? பணம் ஒரு மனிதனிக்கு மிகவும் தேவை. ஆகவே "வீட்டிற்கு லட்சுமி வராது" என்றால், வீட்டிலே நகங்களை போடமாட்டார்கள்.

3. வெள்ளிக்கிழமை கடன் கொடுக்க கூடாது, வீட்டு லட்சுமி வெளியே போய்விடும்.
வாரத்திலே ஒரு நாளாவது கடன் கேட்க்காம இருக்கத்தான் இந்த நம்பிக்கை:))

4. வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கக் கூடாது.
இது விஞ்ஞான ரீதியாக உண்மை. நம் மூளையில் உள்ள ஐயான்ஸ் (Ions) ஐ வடக்கிலிருந்து வீசும் காந்த அலைகள் பாதிக்கிறது. அதற்கு தான் வடக்கே தலை வைக்க கூடாது என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

5. அடி பட்ட இடத்திலே படும்.
இது கண்டிப்பாக ஒரு மனிதனின் அஜாக்கிரதையால் தான், பட்ட இடத்திலே அடி படுகிறது. ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும். காயத்தை கண்டுக்கொள்ளாமல் வேறு வேலை கவனமில்லாமல் பார்த்தால், காயத்தின் மேலே மீண்டும் காயம் படுகிறது.

6. உப்பில்லா பண்டம் குப்பையிலே போடு.
தெனிந்தியா உஷ்ணமான இடம் (வெப்ப மண்டலம் Tropical area). அங்கே தினமும் மனிதனிக்கு வியற்கிறது. இவ்வாறு உடலில் உள்ள அனைத்து உப்பும் வியற்வையால் வெளியேறினால், உணவு மூலமாக உப்பை சேர்த்து அளவை சரி செய்ய வேண்டும். குளிர் பிரதேசங்களில் உப்பு குறைவாக சேர்ப்பது, நன்று. ஆகையால் தான் இப்படி ஒரு நம்பிக்கை தோன்றியிருக்கும்.

7. இலையிலோ (அ) தட்டிலோ சாப்பிடும் போது வழித்து சாப்பிடக்கூடாது, லட்சுமி போய்டும்.
சாப்பிட்டுவிட்டு வெளியே இலையை போடும் போது நாய், கோழி, காக்கா, எறும்பு மற்றும் இதர பூச்சிகளும் அந்த இலையில் உள்ள மீதம் உணவை சாப்பிடும். இதர ஜீவராசிகளுக்கு நம் உணவின் மீதமாவது தானமாக கிடைக்கட்டும் என்பதால் தான் இந்த நம்பிக்கை தோன்றியிருக்கும்.

8. மாலை ஆறு மணியானா விளக்கு வைக்கனும், இல்லையென்றால் லட்சுமி வராது.
"விளக்கில்லா வீட்டில் வைத்தியன் புகுவான்" என்று ஒரு பழமொழியே இருக்கிறது. சூரிய வெளிச்சம் மறைந்ததும் வீட்டில் வெளிச்சம் இல்லையென்றால் பல பூச்சிகள், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நுழைந்துவிடும். மக்கள் ஜாக்கிரதையாக இருக்கத் தான் இந்த நம்பிக்கை.

9. செவ்வாய் வெறும் வாய். செவ்வாய்க் கிழமை புதிதாக எதையும் துவங்கக் கூடாது.
செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் கிரகத்தின் (Mars Planet) கதிர்கள் பூமியை தாக்கி, அதனால், காரியங்கள் தடை படுமோ என்னமோ "செவ்வாய் வெறும் வாய்" என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருந்தால் இங்கே தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.

10. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
புதன் கிழமை அன்று புதன் கிரகத்தின் (Mercury) கதிர்கள் பூமியை தாக்கி, அதனால், காரியங்கள் நல்ல விதமாக நடக்குமோ என்னமோ "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருந்தால் இங்கே தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.

11.பெண்களுக்கு மாத விலக்கு நாட்களில் மூலையில் உட்காரனும்.
சில ஆசாச்சாரமான வீடுகளில் மாத விலக்கு ஆன பெண்களை, இதை செய்யாதே, அதை செய்யாதே, இதை தொடாதே, அதைத் தொடாதே என்று பாடு படுத்திவிடுவார்கள். ஆனால் உண்மை காரணம் என்னவென்று பார்த்தால் இந்த நாட்களில் பெண்கள் வேலை செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொள்ள தான் என்று புரிகிறது.

12. குழந்தைக்கு பல் முளைக்கும் போது வயிற்று போக்கு இருக்கும்.
குழந்தைக்கு பல் முளைக்கும் போது பற்கள் ஊரும். ஏதாவது கடிக்க தோன்றும். அதனால், கையில் கிடைத்ததை வாயில் போட்டுக்கொள்ளும். இதனால் அதற்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

13. 13 அபசகுண எண்.
13 ஆம் எண் நீண்ட நாட்களாக அபசகுண எண்ணாக உலகெங்கிலும் மக்களால் கருதப்படுகின்றன.

முன்பு ரோமனியர்கள் 13 ஆம் எண் இறப்பிற்கும், அழிவுக்கும் ஒரு அறிகுறியாக கருதினார்கள். வல்ஹாலா (ரோம் நாட்டில் ஒரு இடம்) வில் 12 முக்கிய மக்களுக்காக நடந்த ஒரு சிறப்பு விருந்தில், 13 ஆவதாக வந்த ஒருவன் பால்டர் (12 விருந்தினர்களில் ஒருவர்) என்பவரின் புதல்வன் ஓடினை கொன்றுவிட்டான்.

ரோமேனியர்கள் 13 ஆம் எண்ணை மந்திரவாதிகளின் எண்ணாக கருதினார்கள்.

ஏசு நாதரோடு 12 திருத்தொண்டர்கள் கொண்ட கடைசி இரவுச் சாப்பட்டிற்கு (Last Supper) அப்புறம் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

13 ஆம் எண்ணை கண்டு அஞ்சுபவர்கள் "ட்ரிஸ்கைடிகா ஃபோபியா" (Triskaidekaphobia) என்னும் வியாதி உடையவர்கள். மேற்கு நாடுகளில் 13ஆம் தேதியில் மக்கள் நல்ல காரியங்களை செய்யமாட்டார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை வரும் 13 ஆம் தேதி மிகவும் கெட்ட நாளாக கருதுவார்கள்.
பொதுவாக நிலா பூமியை 12 முறை ஒரு வருடத்தில் சுற்றி வரும். எப்போதாவது தான் 13 முறை சுற்றி வரும். இந்த ஒரு மாற்றத்திற்கும் கூட 13 அபசகுணமான எண்ணாக கருதப்பட்டிருக்கிறது.

இந்த 13 ஆம் தேதியில் மக்கள் எந்த காரியமும் செய்யாமல் இருப்பதால், வியாபாரிகளுக்கு அன்றைய வருமானம் மிக குறைவாக இருக்கும்.

இதுக்கு விஞ்ஞான ரீதியாக பதில் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து இங்கே பின்னூட்டம் இடுங்கள்.

14. குழந்தை முறத்தின் மீது அமர்ந்தால் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்வது.
:)). பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிடுறாரோ இல்லையோ நாம் சாப்பிடுவோம் அல்லவா..அதுக்கு தான்.

15. ஆமை வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் விளங்காது.
சுகாவின் பதில்:

ஆமையே வீட்டுக்குள்ள நடந்து வர்ற வரைக்கும் யாரும் கண்டுக்கலைன்னா .. திருடன் வந்தா என்ன ஆகும்... அப்புறம் குடும்பம் விளங்குமா என்ன!? இந்த ஆமைன்னு சொல்றது கல்லாமை, பொறாமை..நாட்டாமை ன்னு கூட எதோ சொல்லுவாங்க :)

இதற்கு விஞ்ஞான ரீதியாக பதில் தெரியவில்லை.

16. வலது கால் எடுத்து வைத்து வருவது.
கைகளிலே வலது கையை தான் நாம் நல்லதுக்கெல்லாம் உபயோகப் படுத்துகிறோம். காலை மட்டும் ஏன் விட்டு வைக்கனும்.:)

17. கற்பினிப்பெண்கள் விரும்புவதை சாப்பிடவில்லை என்றால், குழந்தை காதில் சீழ் வழியும்.
அப்படியாவது அவர்கள் விரும்புவதை உண்ணலாம். விஞ்ஞான ரீதியாக இது உண்மை இல்லை.

இது மாதிரியான மூடநம்பிக்கைகள் இன்னமும் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு சில தான் குறிப்பிட்டுள்ளேன். உண்மை என நம்புகிறவர்களுக்கு உண்மையே. நம்பாதவர்களுக்கு மூடநம்பிக்கையே!!

விமரிசனங்கள்

anbu arattai snehithikku,
ungalukku sila valai thallangal thara vendum...thangal min mukavariyai thanthuthavungall..enathu min mukavari.... ni_ka_jo@yahoo.com.......
http://www.chennainetwork.com/tamil/ebooks/kambar.html
ithu pondru ..inaya pakkangal niraiya irukindrana.

Anbudan

Prakash ( ungalukku nikajo)
 
ஹெ ..ஹெ... ஹெ நரியா, பதிவுல போட மேட்டர் இல்லைனா இப்படி எனக்கு தெரியவில்லை நீங்களே சொல்லுங்கனு கேள்வி கேட்கலாமா ,நல்ல ஐடியாவ இருக்கே! :-))
 
வெள்ளிக்கிழமை கடன் கொடுக்க கூடாது, வீட்டு லட்சுமி வெளியே போய்விடும்.//

வெள்ளிகிழமை வார இறுதி,கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்பதால் இருக்குமோ?
 
வாங்க வவ்வால்.
ப்ளாகை தெரிந்ததை எழுதுவதற்கும், தெரியாததை தெரிந்துக் கொள்வதற்கும் உபயோகப் படுத்துகிறேன்.

இங்கு குறிப்பிட்டுள்ள மூடநம்பிக்கைகளுக்கு சறியான விளக்கம் தெரிந்தால் தயவுசெய்து இங்கே பின்னோட்டம் இடுங்கள்.

நன்றி!
 
வாங்க நிகாஜோ.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை.
"பொன்னியின் செல்வன்" போன்ற அமரர் கல்கியின் சிறந்த கதைகளை
வாழ்வில் என்றாவது படிக்க வேண்டும் என்று கனவு கண்டுக்
கொண்டிருந்தேன். நீங்கள் கொடுத்த இந்த சுட்டியில் நிறைய மின் புத்தகங்கள் இருக்கின்றன.

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்று சொல்லுவதைப்
போல, இவ்வாறு அறிய தகவல்களை கொடுத்துதவும் நீங்களும் கடவுளே!.

நன்றி !!
 
வாங்க செல்வன்.
//வெள்ளிகிழமை வார இறுதி..//
உண்மை.
கடன் வாங்கும் போது, "நாளை கூலி வாங்கியதும் தருகிறேன்" (அ) "நாளை சம்பளத் தேதி, சம்பளம் வாங்கியதும் திருப்பித் தருகிறேன்" என்று வார இறுதியில் கூறினால், கடனை எப்படி திருப்பித் தர முடியும்?. உங்கள் கட்டுரையில் குறிபிட்டுள்ளதைப் போல ஒரு விஷயத்திற்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன.

இன்னும் நான்கு மூடநம்பிக்கைகளுக்கு விளக்கம் தேவை :(. தலை வெடித்துவிடும் போல் இருக்கிறது. :).

நன்றி!
 
அன்பான வாசகர்களே,

இந்த பதிவில் சில புதிய விவரங்களைச் சேர்த்து, மீண்டும் வெளியிட்டுள்ளேன். மீண்டும் படித்து தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பின்னோட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!
 
எனக்கும் 13 ஆகாது நாரியா.13, அதன் inverse ஆன 31 ஆகிய எண்களை கண்டாலே பிடிக்காது.பின்னூட்டம் 13 அல்லது 31 வந்தால் ஒன்று சேர்த்து 14 அல்லது 32 ஆக்கிவிடுவேன்
 
வாங்க செல்வன்.
:)). நீங்கள் உங்கள் மனதை 13 ஆம் எண்ணை வெறுக்க உத்தரவு கொடுத்துள்ளீர்கள். அதனால் தான் 13, 31 எண்ககளை வெறுக்குறீர்கள் என நினைக்கிறேன். இந்த எண்களை நேசிக்கவும் உத்தரவு போட்டால், அதுவே உங்களுக்கு அத்ரிஷ்ட எண்ணாக கூட அமையலாம்!.

செல்வன், "Comment/Feedback" க்கு தமிழில் பின்னோட்டமா இல்லை பின்னூட்டமா?? கண்ணோட்டம், முன்னோட்டம் போல
பின்னோட்டம் என நினைத்து, எனது எல்லா பதிவுகளிலும் சமீபத்தில் தான் பிழைத் திருத்தம் செய்தேன். தயவு செய்து சரியான வார்த்தையை தெரிவிக்கவும்.

நன்றி!
 
hey naria....i really admired ur writings..and enjoying too...expecting more and more
 
வணக்கம் செளமியா. வாங்க!
முதல் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் மிகவும் நன்றி.

என் எண்ணங்கள் எழுத்தாக வருகிறது.

உங்களுக்கு பிடித்தது என் பாக்யம்.
உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

மீண்டும் வருக.
 
வாங்க நாகா.
முதல் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் மிகவும் நன்றி.

//athanal pudan kilamai than nalla active aana naal, annaiku than ella kariyangalum jaruraga nadakum.//

நீங்கள் சொல்வதும் உண்மையாகத்தான் தெரிகிறது.
ஆஹா என்ன சிந்தனை!.

இதற்கு வேறு காரணங்கள் தெரியாததால், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களைப் போல தான் நானும் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தமிழை தட்டச்சு செய்துக் கொண்டிருந்தேன். பின்னர் ப்ளாகர்கலின் (செல்வன், குமரன்) உதவியால் தமிழ் தட்டச்சு தெரிந்துக் கொண்டேன். இதோ இந்த தளத்திற்குச் சென்று "Unicode" என்று அந்த ப்ளாகில் தேடுங்கள்.

http://holyox.blogspot.com/2006/05/87-iii.html

ஒரு பின்னோட்டதில் தமிழ் தட்டச்சு பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். வாழ்த்துக்கள்.

நன்றி மீண்டும் வருக நாகா!
 
மிக தேவையான .. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.

15 :"ஆமை வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் விளங்காது."

ஆமையே வீட்டுக்குள்ள நடந்து வர்ற வரைக்கும் யாரும் கண்டுக்கலைன்னா .. திருடன் வந்தா என்ன ஆகும்... அப்புறம் குடும்பம் விளங்குமா என்ன !?

இந்த ஆமைன்னு சொல்றது கல்லாமை, பொறாமை..நாட்டாமை ன்னு கூட எதோ சொல்லுவாங்க :)

சுகா
 
வாங்க சுகா.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

//"ஆமையே வீட்டுக்குள்ள நடந்து வர்ற வரைக்கும் யாரும் கண்டுக்கலைன்னா .. திருடன் வந்தா என்ன ஆகும்... அப்புறம் குடும்பம் விளங்குமா என்ன !?"//

ஆஹா இதற்கு இப்படி ஒரு விளக்கமா. நான் கூட இப்படி யோசிக்கவில்லை. அருமை.

ஆமை நுலைவது என்றால் "கல்லாமை, பொறாமை..நாட்டாமை" என்றும் கூட பொருள் இருக்கிறதா. புதிய தகவல். நன்றி.

அப்படியே இந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை பற்றியும் கொஞ்சம் தயவு செய்து யோசனை செயுங்களேன்.
நன்றி
 
Thanks thurgah!
 
கீழ்கண்ட மூடநம்பிக்கைகளுக்கு அடியேனின் மாற்றுக்கருத்து.

9. செவ்வாய் வெறும் வாய். செவ்வாய்க் கிழமை புதிதாக எதையும் துவங்கக் கூடாது.
"செவ்வாகெழமன்னிக்கு செஞ்சுட்டா போச்சு"ன்னு வெறும் வாயாலையே வாயுதா வாங்கிட்டு இருக்கவங்களுக்கு, "எதுக்குய்யா செவ்வாக்கெழம வரைக்கும் தள்ளிப்போடுறே ?? நல்ல காரியத்த சீக்கிரமே ஆரம்பி"ன்னு சொல்றாங்களோ என்னமோ!!

10. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
"போன மச்சான் திரும்ப வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்குங்க, ஆனா போன புதன்கிழமை திரும்ப வராதுங்க..."
காலம் தாழ்த்தாமல் வேலையை ஆரம்பித்து முடிக்கச்சொல்கிறார்களோ என்னமோ!!
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?