6. இந்திய தேசிய கீதம் - தமிழாக்கம்


//ஜன கன மன அதினாயக ஜய ஹே//
எல்லா மக்களின் மனதையும் ஆளுகின்ற இறைவா வெற்றி உங்களுக்கே!

// பாரத பாக்ய விதாதா//
பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே

// பஞ்ஜாப் சிந் குஜராத் மராதா//
பாரதம் என்றாலே மனதிலே உதிப்பது பஞாப், சிந், குஜராத், மஹாராஷ்ட்ரா

//திராவிட உட்கல பங்கா//
திராவிடர், ஒரிஸா, வங்காலம்

//விந்ய ஹிமாச்சல யமுனா கங்கா//
விந்தியா மலைகள், ஹிமாச்சலம், யமுனை நதி, கங்கை நதி

//உச்சல ஜலதி தரங்கா//
மலைகளிளே எதிரொலிக்கிறது, நதிகளிலே கலக்கிறது, இந்திய கடல்கள் ஓதுகின்றது (பாரதத்தின் பெயரை)

//தப ஷுப நாமே ஜாகே//
உங்களை புகழ்ந்து போற்றுகின்றோம்

//தப ஷுப ஆஷிஷ மாங்கே//
உங்களின் அருளை கேட்கிறோம்

//காஹே தப ஜய காதா//
உங்களை போற்றி பாடுகிறோம்

//ஜன கன மங்களதாயக ஜய ஹே//
பாவங்களில் இருந்து மக்களை காப்பது உங்கள் கையில் உள்ளது

//பாரத பாக்ய விதாதா//
பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே

//ஜய ஹே ! ஜய ஹே ! ஜய ஹே ! ஜய,ஜய,ஜய,ஜய ஹே//
ஜெயம் உங்களுக்கே!!

எல்லா மக்களின் மனதையும் ஆளுகின்ற இறைவா பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே பாரதம் என்றாலே மனதிலே உதிப்பது பஞ்ஜாப், சிந், குஜராத், மஹாராஷ்ட்ரா, திராவிடம், ஒரிஸா, வங்காலம்.

"பாரதம்" என்று, விந்தியா ஹிமாலய மலைகள் எதிரொலிக்கிறது கங்கை யமுனை நதிகளில் கலக்கிறது, இந்திய கடல்கள் ஓதுகிறது.

பாரதத்தின் இறைவா, உங்களைப் புகழ்ந்து போற்றுகிறோம், உங்கள் அருளை வேண்டுகிறோம். எங்களைக் காப்பது உங்கள் கையில் உள்ளது.

ஜெயம் உங்களுக்கே!!

பின் குறிப்பு:
1. 1911 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்ரஸின் பொதுக் கூட்டத்தில் இந்த பாட்டு, முதன் முறையாக பாடப்பட்டது. இதை எழுதியவர் ரபிந்ரனாத் டாகோர். கிங் ஜார்ஜ் ஐந்து தன்னை புகழ்ந்து ஒரு பாட்டு பாட டாகோரை கேட்டுக்கொண்டார். ஆங்கிலேயர்களைப் பற்றி எழுத மனமில்லாமல், "பாரதத்தை காக்கும் இறைவன்" என்ற பொருளில் எழுதினார்.

2. என் தோழி கொடுத்த ஆலோசனைப் படி இதை தமிழிலே மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்.

3. இதற்கு உபயோகமாக இருந்த தளம் http://www.indianchild.com/national_anthem.htm

விமரிசனங்கள்

this is very usuful for my company day celebration day.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?