5. அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம்

தமிழ்நாட்டில் உள்ள அரசாங்க பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஒரு பாடமாக உள்ளது. சராசரி குழந்தைகள், எப்படியாவது மனப்பாடம் செய்து தேர்வுக்குரிய மதிப்பெண்களை எடுத்துவிடுகிறார்கள். இவர்கள் கல்லூரி செல்லும் போது இளங்கலை தமிழ் இலக்கியம் (BA Tamil Literature) மற்றும் வரலாறு (BA History) தவிர மற்ற எல்லா பாடங்களிலும் ஆங்கிலத்தில் இருப்பது இவர்களுக்கு கடினமாக உள்ளது.

திடீரென எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படித்து அவற்றை புரிந்துக்கொண்டு மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கித் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். அப்படி தேர்ச்சிப் பெற்று வேலைக்கு சென்றாலும் (உதாரணம் மென்பொருள் (Software) வேலை (அ) சந்தைப்படுத்துதல் (Marketing) துறை) அங்கே ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தால் தான் வாடிக்கையாளர்களை கவர முடியும்?.

இதற்காக நிறைய மக்கள் "பேசுகின்ற ஆங்கிலம்" ("Spoken English) பாடங்களில் சேர்ந்து பயிற்சிப் பெற்று கொள்கிறார்கள். ஏழ்மையான சராசரி மனிதன் இந்த மாதிரியான தனியார் வகுப்புகளில் சேர்வது சந்தேகம் தான். இது ஏன் அரசாங்கமே பள்ளிக்கூடங்களில் செய்யக்கூடாது? எட்டாம் வகுப்பிலிருந்தே(அல்லது அதற்கு முன்பே) "Spoken English" பாடங்களை, அறிமுகப்படுத்தினால் மாணவர்கள், ஆங்கிலப்பாடங்களை எழுதவும், படிக்கவும் தவிர சரளாமக பேசவும் கற்றுக்கொள்வார்களே!

இவர்கள் கல்லூரியில் படிக்கும் போது பாடங்கள் மிக எளிதில் புரியுமல்லவா. இந்த மாதிரியான "பேசுகின்ற ஆங்கிலம்", பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் நடத்தப்படலாம்.

எனது தோழி "நான் சிறிய வயதிலேயே ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால், இந்நேரம் அழகாக ஆங்கிலத்தில் உரையாடி இருப்பேன்" என்று வருத்தப் படுவாள். இவ்வாறு எல்லோரும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்தால், அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் என்னாகும்??

வேற்று மொழியானாலும், அரசாங்கமே கல்வித்திட்டத்தில் "பேசுவதற்கு ஆங்கிலம்" பாடங்களை அறிமுகப்படுத்தினால் மக்கள் கண்டிப்பாக பயன் பெறுவார்கள் என முழுமையாக நம்புகிறேன்.

"திரை கடல் கடந்தும் திரவியம் தேடு" என்னும் நம் தமிழர்கள் எந்த நாடு சென்றாலும், அடிப்படை ஆங்கிலம் பேசுவற்கு தெரியும் போது அந்த ஊர் மக்களிடம் மிக எளிதில் தொடர்புக் கொள்ள முடிகிறது. மற்றொரு மொழியை தெரிந்துக்கொள்ளும் போது தான் தமிழின் அருமையை புரிந்துக்கொள்ள முடியும்.

ஆகவே அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இரு மொழியிலும் சரளமாக எழுத படிக்க பேச பயிற்சி பெற்று நல்ல நல்ல வேலைகளில் பணிபுரிந்து, தமிழகத்தை முன்னேற்றுவார்கள் என நம்புகிறேன்.

விமரிசனங்கள்

வணக்கம் நரியா!

அவன் அவன் இங்கே தமிழ் அழிந்து வருகிறதே என அபாயக்குரல் எழுப்பிக்கிட்டு இருக்கும் போது எப்படி தான் இப்படிலாம் எழுத தோனுதோ! போற போக்கப்பார்த்தா தமிழ் எதுக்கு தேவையே இல்லை என்று சொல்வீர்கள் போல் உள்ளது!

முதலில் தமிழில் தேவையான அளவு பரிட்சயம் இருக்கானு உங்களையே நீங்கள் சுயபரிசோதனை செய்து பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் தமிழறிவு! ஒரு தோசை 20 ரூபாய் என்றால் தோசைக்கு அவ்வளவு காசா என முனகிகொண்டு கூசாமல் 100 ரூபாய் கொடுத்து பீட்சா சாப்பிடும் மனோபாவம் உள்ள உங்களை போன்றவர்களால் தான் நல்ல தமிழ் கெட்டு தமிங்கிலம் ஆக பேசப்பட்டு வருகிறது!
 
all the best for your blog naria
 
வாங்க வவ்வால்.
அரசாங்க பள்ளிகளில் ஆங்கிலம் எழுத்தப்படிக்க கற்றுத்தரும் போது, ஏன் சரளமாகப் பேசக் கற்றுக்க்கொடுப்பது இல்லை என்பதே என் வினா? அதற்கான வழிகளைத் தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இது மாணவர்கள் நலம் கருதியே தவிற தமிழை இழிவு படுத்த அல்ல.

// முதலில் தமிழில் தேவையான அளவு பரிட்சயம் இருக்கானு உங்களையே நீங்கள் சுயபரிசோதனை செய்து பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் தமிழறிவு!//

உண்மை தான். தமிழ் புலவர் அல்ல நான். தமிழ் மீது கொண்ட விருப்பத்தால் தான் இவ்வாறு தமிழில் எழுதுகிறேன்.


//ஒரு தோசை 20 ரூபாய் என்றால் தோசைக்கு அவ்வளவு காசா என முனகிகொண்டு கூசாமல் 100 ரூபாய் கொடுத்து பீட்சா சாப்பிடும் ...//

இந்தியாவில் இதுவரை நான் பீட்சா சாப்பிட்டதில்லை. விலை கூறியதிற்கு நன்றி :)!

நரியா
 
Thanks a lot Selvan.

It was possible because of the encouragement given to me by bloggers like you.

Thanks again,
Naria
 
நீங்க தமிழ் புலவராக இருக்கனும் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை தமிழை தவறின்றி பேசமுடியவில்லையே என்று வருத்தபடுவதில்லை ஆனால் ஆங்கிலம் சரியா பேசலையேனு வருத்தப்படும் உங்கள் எண்ணத்தை தான் கூறுகிறேன்.தமிழை தப்பு தப்பா கடிச்சு துப்பலாம் எவன் கேட்க போறான் ,அதுவே ஆங்கிலம்னா தப்பா பேசிட்டாலோ.எழுதிட்டாலோ ஒரே அவமானமா போய்டும் இல்லையா :-))

இதான் இந்த காலத்து தமிழனோட மனோபாவம் பெத்த அப்பா,அம்மாவ கூட கண்டுக்க மாட்டான் ரோட்ல போற வயசான அம்மாவ பார்த்து அயோ பாவம்னு அனுதாப படுவான்!
 
வணக்கம் வவ்வால்.
நீங்கள் சொல்ல்வதைப் பார்த்தால் ஆங்கிலமே ஒரு பாடமாக அரசுப் பள்ளிக்கூடங்களில் இருக்கக் கூடாது என்பது போல் உள்ளது (ஏற்கனவே உள்ளது).

உலகலாவிய மொழி எதுவாக இருந்தாலும் அதை எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கும் அரசாங்கம், அதை பேசுவதற்கும் சில வழிகள் மேற்கொண்டால் மக்களுக்கு நன்மை என்பது என் கருத்து (பல முறை நான் இங்கே கூறிய கருத்து).

சரி தான். இனி கலைஞர் ஆட்சி. வேற்று மொழியை பற்றி பேசக்கூடாது தான் :)

நன்றி,
 
நாரியாவின் கருத்துக்களில் தப்பு என்ன இருக்கு?நமக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ ஆங்கிலம் என்பது இன்று அத்தியாவசிய மொழி என ஆகிவிட்டது.அதை பிழையின்றி படிப்பதில் தப்பே கிடையாது.ஆங்கில புலமை இன்று கட்டாயம் தேவை என்றாகிவிட்டதால் சரியாக ஆங்கிலம் படிக்க,உச்சரிக்க,எழுத மாணவர்கள் பயில்வது அவசியமாகும்
 
நீங்களே ஆங்கிலம் ஒரு பாடமாக வகுப்புகளில் இருக்கு என்று தெரிந்து வைத்துள்ளீர்கள் அது போதாதா?

//உலகலாவிய மொழி எதுவாக இருந்தாலும் அதை எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கும் அரசாங்கம், அதை பேசுவதற்கும் சில வழிகள் மேற்கொண்டால் மக்களுக்கு நன்மை என்பது என் கருத்து //

இப்பொழுது பள்ளிகளில் சொல்லித்தரும் ஆங்கிலம் வைத்து எழுத,படிக்க முடியாதா,இதற்கும் மேலும் ஆங்கிலம் வேண்டும் என்பதை தான் தேவையற்றது என்கிறேன். தமிழ் பற்று உள்ள யாரைக்கேட்டாலும் சொல்வார்கள் தற்காலத்தில் தமிழ் நலிவடைந்து வருகிறது.அதனை மீண்டும் மேம்படுத்த வேண்டும் என்று எனவே தான் இணையத்திலும் தமிழை வளர்க்க பலரும் பெரும்பாடு படுகிறார்கள்.இங்கே வலைபதிவுகளில் கூட குமரன்,இராம.கி போன்ற வலைப்பதிவாளர்கள் தமிழை மக்கள் மறந்து விடாமல் இருக்க தமிழ் இலக்கியம் சார்பான வலைப்பதிவுகள் போடுகிறார்கள்.உங்களை போன்றுள்ளவர்கள்(ஆங்கில மோகம் கொண்டவர்கள்) தமிழை வளர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை வாழ வழிவிடுங்கள்! வேரில் வெண்ணீர் ஊற்ற வேண்டாம்!
 
Hi
I strongly agree Naria's point.

To develop or to grow Thamiz dosent mean that you should not learn or aware abt other languages.

We all know Bharathiyar's , "Yaamarintha mozigalile...".

If you want to take up a career in TN which deals only Tamil then u need not bother abt any languages.
Even then if u want to be aware of the competitors u should have FLUENCY in other languages.

I do not know where Vavval is sitting and writing this comment.
Hi Vavval come down to Bangalore i will show TAMIL people who struggle in life just bcoz they do not have English Fluency.

I have many of my friends who have completed MCA from TOP colleges with GOOD percentage from TamilNadu and stayed in my hostel in search of SOFTWARE job and went back home without getting any job just because they lack SPOKEN English.

I too agree that SPOKEN English is not necessary...(-:

You know when...

If you are EXCELLENT,BRILLIANT and most talented in Concepts.I have few friends like this also. Their communication in English is not very good but still they survive because they are BRAINS.

But unfortunately EVEYRBODY cannot be BRAINS....as all the five fingures are not same.

[Vavval..]இப்பொழுது பள்ளிகளில் சொல்லித்தரும் ஆங்கிலம் வைத்து எழுத,படிக்க முடியாதா,இதற்கும் மேலும் ஆங்கிலம் வேண்டும் என்பதை தான் தேவையற்றது என்கிறேன்

As Vavaal said, u can read and write English with what they teach in school...but... bet you among 80 in a class (strenght of my class, E.V.R.N.Govt Girls Hr Sec School is 80,English Medium !!!) in govt school only 5 to 10 SPEAK English.

I guess Naria's pt her is, why not everyone are given chance to learn how to speak English.

Even when chances are given, not everyone will pick up.it Depends upon the caliber of individuals.
BUT CHANCES HAVE TO BE GIVEN.

Take a survey in govt schools in TN. I am sure everyone will love to learn SPOKEN English.

i swear,Spirit of Tamil is there hidden in every Tamilian.I stay in a PG with mixed people from all the states in India.

u know what people over here tell, Tamilians have move spirit towards their language compared to others.

Vazga Tamil...Valarga Spoken English in TN

Bye for now,
Accenture Azagi
 
வாங்க செல்வன்.
//ஆங்கில புலமை இன்று கட்டாயம் தேவை என்றாகிவிட்டதால் சரியாக ஆங்கிலம் படிக்க,உச்சரிக்க,எழுத மாணவர்கள் பயில்வது அவசியமாகும்//

முற்றிலும் உண்மை.

"செய்வதை திருந்த செய்" என்பதே என் கருத்தும்!!

நன்றி!
 
வாங்க வவ்வால்.

// இப்பொழுது பள்ளிகளில் சொல்லித்தரும் ஆங்கிலம் வைத்து எழுத,படிக்க முடியாதா,இதற்கும் மேலும் ஆங்கிலம் வேண்டும் என்பதை தான் தேவையற்றது என்கிறேன்.//

பேசுவதற்கும் அரசாங்கம் ஆசிரியர்களின் மூலமாக வழி செய்ய வேண்டும் என்பது என் பேராசை.

//உங்களை போன்றுள்ளவர்கள்(ஆங்கில மோகம் கொண்டவர்கள்) தமிழை வளர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை வாழ வழிவிடுங்கள்! வேரில் வெண்ணீர் ஊற்ற வேண்டாம்!//

நீங்கள் மனோதத்துவ நிபுனர் போல என்னை ஆராய்ந்த்துக் கொண்டிருக்கிறீர்கள் :) (ஆங்கிலம் மீது தான் மோகம், ஆங்கிலேயர்கள் மீது அல்ல :)). ஆங்கிலம் தவிற, ஃப்ரெஞ், இந்தி மீதும் எனக்கு மோகம் தான்.

பற்று தமிழின் மீது மட்டும் இருந்தால் போதுமா? தமிழர்கள் மீதும் இருக்க வேண்டாமா??.

தமிழர்களின் வளர்ச்சிக்கு தான், செய்வதை திருந்த செய்ய சொல்கிறேன்.

நன்றி!
 
Welcome back azhagi!
//We all know Bharathiyar's , "Yaamarintha mozigalile...".//
Thanks for stating this statement here. If Bharathiyar is still alive, he would have mastered many foreign languages (reading, writing, speaking) and still would have stated Thamizh is the most sweetest language. That is his sincere Thamizh love.

// I have many of my friends who have completed MCA from TOP colleges with GOOD percentage from TamilNadu and stayed in my hostel in search of SOFTWARE job and went back home without getting any job just because they lack SPOKEN English.//

True. Great talents are not seen because of the fluency.

// But unfortunately EVEYRBODY cannot be BRAINS....as all the five fingers are not same. //

Hope Vavvaal is one of the BRAINS:)). Salute !!.

// Take a survey in govt schools in TN. I am sure everyone will love to learn SPOKEN English.//

When someone is hungry and if you offer them little food, definitely their hunger will increase.

Likewise, giving students little knowledge about a lanugage will increase their curiosity to learn more. When students with such curiosities are not taken care they get disappointed or may even devlop complex (inferior).

// i swear,Spirit of Tamil is there hidden in every Tamilian.//

Hidden as well as exposed in many forms like websites and blogs like vavaal said.

That was really wonderful azhagi. Your thoughts are clear in the script.

Ciao!
 
நரியா ஆங்கில மோகம் என்று சொன்னால் ஆங்கிலயேர் மீது மோகம்னு பேசும் உங்கள் தமிழ் புரிதலை வைத்துக்கொண்டு நான் ஏதும் பேச முடியாது.:-))

ஆங்கிலத்தில் பிதற்றும் அழகி என்பவர் கூறியதற்கு மேற்கொண்டு நான் பதில் கூறுவது கால விரயம்.

என்னைப்போன்றவர்களால் ஒன்றும் தமிழ் வளர்ந்து விடாது என நீங்கள் நினைப்பது போல உங்களைபோன்றோர்களால் தமிழ் அழிந்து விடாது என நானும் நம்பிக்கை கொள்கிறேன்!
 
வாங்க வவ்வால்.
//என்னைப்போன்றவர்களால் ஒன்றும் தமிழ் வளர்ந்து விடாது என நீங்கள் நினைப்பது போல...//

இது உங்கள் கற்பனை.

// ...உங்களைபோன்றோர்களால் தமிழ் அழிந்து விடாது என நானும் நம்பிக்கை கொள்கிறேன்! //

யார் நினைத்தாலும் தமிழை அழிக்க முடியாது. தமிழ் வற்றாத ஜீவ நதி. கற்பக விருக்ஷம். தமிழிலே ப்ளாக் எழுதும் நீங்களும் இந்த மரத்த்ற்கு தண்ணீர் ஊற்றுபவர் தான்.

நன்றி!
 
சபாஷ்... சரியான போட்டி...

இதோ, எனது இரண்டு பைசா:
அந்நிய மொழியான ஆங்கிலத்தை கற்றதினால் தான் யாம் இங்கே தமிழில் கருத்துக்களை கூற இயல்கிறது. சீனாவில் தமிழ் பரப்ப முதலில் சீன மொழியை கற்க வேண்டும். அது போல, வலைதளத்தில் தமிழ் பரப்ப முதலில் ஆங்கிலம் கற்க வேண்டி உள்ளது. அது மட்டுமல்லாது, அயல்நாட்டு அறிஞர்களின் படைப்புகளை படித்து அறிய, ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியினை செவ்வனே கற்பதில் தவறேதும் இல்லை என்பது அடியேனின் கருத்து.

தமிழ்ப்பற்றுள்ளோரே!!
உங்களால் முடிந்தால், அந்நிய மொழியில் உள்ள அறிய படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து, அச்சில் ஏற்றி, இவ்வுலகம் பெற்ற அறிவினை தமிழன் பெற உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்த பதிவைப் பாருங்கள்

http://aangilam.page.tl/English-as-a-second-language.htm
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?