4. ஸ்லிம் சிம்ரனாக வேண்டுமா? இதோ புதிய உணவு முறை.


எடை குறைப்பது கனவாக உள்ளது பல பேருக்கு. நான் கடைப்பிடித்த சில எளிமையான முறைகளை இங்கே சொல்கிறேன். எடை குறைப்பதற்கு முக்கியமாக பட்டினி இருக்க கூடாது. நவீன முறையில் ஜிம் சென்று தான் எடை குறைக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. எடை குறைப்பதர்க்கு மாத்திரையோ, மருந்தோ தேவையில்லை. நம் உணவு பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும்.

ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ குறைய வேண்டுமானால் இதோ என்னுடைய புதிய உணவுத்திட்டத்தை கடை பிடியுங்கள்.

1. காலை எழுந்தவுடன் கால் லிட்டர் வெண்ணீரில், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள்.

2. அரை மணி நேரம் கழித்து காஃபி/ டீ அருந்தலாம்.

3. காலை சிற்றுண்டிக்கு

ஓட்ஸ் கஞ்சி (அ)
பிங்க் போரிட்ஜ் (அ)
ரவா கஞ்சி (அ)
இரண்டு இட்லி (அரிசி/ரவா) (அ)
இரண்டு தோசை (அரிசி/கோதுமை)

சாப்பிடலாம். பின் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

4. காலை உணவிர்க்கும் மத்திய உணவிர்க்கும் நடுவில் (Brunch) பசித்தால்(எனக்கு கண்டிப்பா பசிக்கும்:)), பழங்கள் சாப்பிடலாம் (எடை போடக்கோடிய பழங்கள் ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் குறைவாக சாப்பிடலாம். மற்ற பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்). பின் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

5. மதிய உணவிர்க்கு சாம்பார், ரசம், மோர் மூன்றும் சாப்பிடலாம்...சாதத்துடன் அல்ல:)) கோஸுடன். கோஸை பொடிதாக நறுக்கிக்கொண்டு, அரை வேக்காடாக எடுத்து, அதிலேயே சாம்பார், ரசம் மற்றும் மோர், காய், கூட்டு அனைத்தையும் அரை வயிறு வரை சாப்பிடலாம். பின் நிறைய தண்ணீர் குடிக்கவும். மோர் குடிக்கலாம்.

6. மதியானம் ஒரு மூன்று மணியளவில் பசிக்குமே? (எனக்கு கண்டிப்பா பசிக்கும்:). சோளப்பொரி (Popcorn), வெள்ளரிக்காய், தர்பூஸனி போன்ற பழங்கள் சாப்பிடலாம். மோர் குடிக்கலாம்.

7. மாலை காஃபீ/டீயுடன் பிஸ்கட் சாப்பிடலாம் (பஜ்ஜி சொஜ்ஜி மூச்).

8. நீங்க ஆத்திகரா பலே பலே. வேலை சுலபம். பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று, ஏதாவது வேண்டிக்கொண்டு, சும்மா பத்து சுற்று கோவிலைச் சுற்றுங்கள்(மரத்தை சுற்றுவதென்றால் முப்பது சுற்று :)). இது தான் உடற்பயிர்ச்சி உங்களுக்கு (வீட்டு வேலை செய்வது தவிர).

9. இரவு உணவிர்க்கு
ரவா உப்மா (அ)
சேமியா உப்மா - 2 கரண்டி (அ)
கேழ்வரகு அடை- 2 (அ)
தோசை(அரிசி/கோதுமை)- 2 (அ) 3
இட்லி (ரவா/அரிசி)- 2 (அ) 3 (அ)
சப்பாத்தி - 2

சாப்பிடலாம். சாப்பிட்ட பின் வயிறு காலியாக (அ) உணவு பற்றவில்லை என்று தோன்றினால், இருக்கவே இருக்கு பழங்கள். பின் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

10. தூங்கப்போகும் முன் விருப்பம் இருந்தால் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.

பின் குறிப்பு:
மேற்கண்ட உணவு முறைகளில் நீங்கள் கவனிக்க வேண்டியது

1. சாதம் தவிர்க்கப்படுகிறது (இருப்பினும் இட்லி தோசை அரிசியில் ஆனது தான்).

2. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

3. நொருக்கு தீனி மற்றும் இனிப்பு பண்டங்களை முற்றிலும் மறக்க வேண்டும். மறக்க முடியாதவர்கள், அவற்றை பார்த்து ஏங்குவதர்க்கு பதிலாக, ஒன்று இரண்டு சிப்ஸ் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீர் குடிக்கவும்.

4. இனிப்பை கட்டு படுத்த முடியாதவர்கள், வெல்லத்தால் ஆன இனிப்பு பண்டங்களை சிறிதளவு சாப்பிடலாம்.

5. நீங்கள், எப்பவும் பட்டினி இருக்கத்தேவை இல்லை.

6. காலையில் வெண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்பு, ரத்தத்தில் கலந்து விடுகிறது.(அப்புறம் அந்த இரத்தம் சிறுநீரகம் சென்று, சிறுநீர் வழியாக அதிக சத்து வெளியே வந்துவிடுகிறது.)

7. கோஸ் போன்ற நீர் காய்களில் அதிக Carbohydrates கிடையாது.

8. இந்தத் திட்டம் சைவம் உண்பவர்களுக்கு மிகவும் பொருந்தும். அசைவம் உண்பவர்கள், இதே திட்டத்தோடு அசைவத்தில், மீனை அதிகம் சேர்த்துக்கொண்டு, மற்ற அசைவ உணவை குறைத்துக்கொண்டால் பலனளிக்கும்.

9. அடிக்கடி வெளியே சாப்பிட வேண்டிய நிலமையில் இருப்பவர்கள், அதிகமாக காய் (பொறியல், கூட்டு), பழங்களை சேர்த்துக்கொண்டு, சாதத்தின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

10. நண்பர்கள் (அ) உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் பொது இனிப்புக்கு பதிலாக, பழங்களை கொடுக்கலாம்.

11. வீட்டிற்கு யாராவது வந்தாலும், காஃபீ/டீ க்கு பதிலாக, எலுமிச்சை பானம் குடிக்கவும், வெள்ளரிக்காய் கொரிக்கவும் கொடுக்கலாம்:) (வந்தவர்கள் இனிப்பு, சிப்ஸ், மிச்சர் போன்ற பண்டங்களை தந்துவிட்டால் அவர்களுக்கே அதை பரிமாருங்கள் (அ) வீட்டிற்கு வேறு யாராவது வரும்பொது பெருமிதத்தோடு கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொள்ளுங்கள்:))).

12. மத்தியானம் தூக்கத்தை தவிர்க்கவும்.

13. எடை குறைவதை நீங்கள் அதிகமாக சிறுநீர் போவதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

14. இந்த திட்டத்தை கடைப்பிடுக்கும் போது, "நொருக்கும், இனிப்பும் சாத்தான்கள், ஒஸாமா, Hitler , இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை கொடுமைப்படுத்திய ப்ரிட்ஸ். அதை நான் தீண்டமாட்டேன்" என்று மனதிலே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்:)).

15. "சாதம் சாப்பிடாமல் எப்படி இருப்பது ?" என்று நினைப்பவர்கள், மத்தியம் உணவிர்க்கு பொறியலுடன் ரசம் சாதம் சாப்பிடலாம்.

16. வெளியே மழை, இன்று நடக்க முடியவில்லை என்று வருத்த பட வேண்டாம். வீட்டிலே படிகள் உள்ளதா. பத்து முறை ஏறி இறங்குங்கள்.(யாராவது கேட்டால், "நான் உடற்பயிற்ச்சி செய்கிறேன்" என்று பெருமையுடன் கூறுங்கள்.)

17. ஒரு மருத்துவரை சந்தித்து இந்த திட்டத்தை பற்றி ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

18. தேவை இல்லாத எடையை ஒழிச்சு தள்ளுங்க. நல் வாழ்துக்கள்!!.

விமரிசனங்கள்

வணக்கம் நரியா!

ஒரு வழிய வலைபதிவு உலகத்தில் வலது,இடது கால் எல்லாம் எடுத்து வைத்து வந்துட்டிங்க போல வாழ்த்துகள்.மேலும் பல பல பதிவுகள் போட்டு அனைவரின் தலைவலியையும் அதிகப்படுத்த வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :-)).

எனது எதிரிகளை எல்லம் உங்க பதிவ கண்டிப்பா படிக்க சொல்றேன்( பின்ன எப்படி அவங்களை எல்லாம் ஒழித்து கட்டுறது :-)) )

உங்க டயட் குறிப்பு எல்லாம் உடம்பு இளைக்க சொன்னாப் போலவே இல்லையே நீங்க சொன்ன படி சாப்டா ரெண்டு சுத்து உடம்பு பெருத்து போய்டும் போல இருக்கு.நான் வழக்கமாவே இதை விட கம்மியா தான் சாப்டுவேன் ,நீங்க என்னடான இதை டயட் சொல்றிங்க ஃபுல் கட்டு கட்டிடு :-))
 
Hi da
wow..this is wat i was expecting...Let me also follow and give the feedback !! magale reverse reaction aachini vachika...new jersy vanthu uthaipen...
One suggestion regarding ur thamiz....whereever ir and ik comes subsequently like kuraipatharku we shd use big ir, i.e periya ir (u have used chinna ir)

Bye for now
Accenture Azagi
 
wow...really superb naria...evalavu azhaga solli irukeenka...ithe munnadiye paathirunthean na VLCC ku panna selavu mitchamayirukkum...nalla ubayokamaana seithi ithu naria...very good.ithukku uriya comment than maathi anka poiduchu naria:(
 
வாங்க அழகி.
:))

//magale reverse reaction aachini vachika...new jersy vanthu uthaipen...//

தாராளமாக ந்யு ஜெர்சி வாருங்கள். நான் இருப்பது விர்ஜீனியா:))

Reverse reaction கண்டிப்பா ஆகாது.

"Low Carb" உணவு, அதிக தண்ணீர் மற்றும் உடற்பயிற்சி இனைப்பிரியாத தோழிகள்(கல்லூரியில் நம்ம மூன்று பேர் போல:)). இவற்றை பிரித்து விடாதீர்கள். இந்த மூன்றும் முப்பெரும் தேவிகள், மூவேந்தர்கள், மூன்று கடவுள்கள்(ப்ரமா, விஷ்னு, சிவா) என்றெல்லாம் நினைத்துக்கொள்ளுங்கள்:)).

ஒரு மனிதனுக்கு அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், மீதம் காற்று இருக்கவேண்டும் என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுவார்கள்.
எடை குறைக்கவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறீர்கள் என்றால், வயிற்றை ஏமாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பின் சாப்பிட்டால் குறைவாக தான் சாப்பிடுவோம். பிறகு பசித்தால் "பசிக்க பசிக்க பழமே" என்று பழங்கள் நிறைய சாப்பிடுங்கள். "ஸ்லிம் சிம்ரனாக" வாழ்துக்கள்!!

// One suggestion regarding ur thamiz....whereever ir and ik comes subsequently like kuraipatharku we shd use big ir, i.e periya ir (u have used chinna ir)
//
மிகவும் நன்றி அழகி. தவறினை திருத்திக்கொண்டேன் (உங்க அலுவலகதிலே தமிழுக்கு Spell Check உருவாக்குங்களே, எவ்வளவு வசதியா இருக்கும்:)) ). இன்னமும் தவறு இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி,
நரியா
 
வாங்க வவ்வால்.
முதல் வருகைக்கும் முதல் பின்னோட்டத்திர்க்கும் மிகவும் நன்றி.
நீங்களும் படிங்க. உங்க எதிரிகளும் படிக்கட்டும்:)).உங்க எதிரிகளுக்கு தனியா ஒரு வரி கவிதை எல்லம் போடுரேன். உங்க கிட்ட எப்பவுமே ராங் பண்ண மாட்டாங்க :))

இந்த உணவுத்திட்டம் நானே கடை பிடித்தது. இது எடை குறைக்க மிகவும் உதவும். இது மாதிரியான சாதம் அற்ற உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சியை கடைப்பிடித்தால், கண்டிப்பாக எடை குறையும். இந்த திட்டதிலே அதிக Carbohydrates மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவு கிடையாது.(திடத்தில் நிறைய "(அ)" போட்டுருக்கேன் பாருங்க :))).
வீண் பட்டினி இருக்காமல் வீட்டிலேயே எடை குறைப்பதற்கு இது கண்டிப்பாக உதவும்.

மீண்டும் வருக.

நன்றி,
நரியா
 
வாங்க கீதா.
உங்கள் முதல் வருகைக்கும், பின்னோட்டத்திற்கும், பாராட்டிற்கும் மிகவும் நன்றி. இந்த உணவுத்திட்டம் எடை குறைவதற்கு மட்டுமில்லாமல் ஆரோக்யத்திற்கும் உதவும். அடிக்கடி வாங்க!!

நன்றி,
நரியா
 
என்னங்க கண்டிப்பா இளைச்சுருவென்லே?

இல்லேன்னா? எங்கே போயிரப் போறிங்க?

அப்பக் கவனிச்சுக்கவா? :-)))))

வலை உலகில் வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.
 
வாங்க துளசி கோபால்.
முதல் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மிகவும் நன்றி.

இந்த உணவுத் திட்டத்தை கடைபிடித்தால் கண்டிப்பாக எடை குறைவீர்கள். நிறைய தண்ணீர் குடிப்பதும், உடற் பயிற்சியயையும் சேர்த்து கடைபிடியுங்கள். வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.
 
உணவுப் பழக்கங்கள் மூலமே எடை குறைக்க நல்ல வழிகளைச் சொல்லியிருக்கிறீர்கள்!

என்ன, ஒரு 'வெரைட்டி' இல்லாம ஜனங்க நொந்து போயிடுவாங்க!

ஆனா, அதுதானே டிஸிப்ளின் ங்க்றது!

வென்னீரோடு எலுமிச்சை சாறு, கூட ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இன்னும் நன்று.

நான் எப்போதும் கூறும் ஆலோசனையே, அடுத்த 3 மணி நேரத்துக்குத் தேவையான உணவை மட்டும் சாப்பிட்டு, அதனையும் ஏதோ ஒரு வகையில் பயிற்சி செய்து கழித்து விட வேண்டும் என்பதே!

திறனாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

நாத்திகர் கூட, வேண்டுமெனில், எதிர்ப்பக்கமாகக் கோயிலைச் சுற்றலாம்!!
 
வாங்க எஸ்.கே.
தங்கள் வருககைக்கு மிக மிக நன்றி. சாம்பார், ரசம் மோர் இதில் எதயுமே விடல. ஏன்னா நம்ம மக்கள் வரைய்டியா சாப்பிட்டு பழகினவர்கள். இது கூடாது அது கூடாது என்றால் ஏங்கிடுவார்கள் என கருதியே, அரிசியை ஒதிக்கிவிட்டேன்.

இந்த உணவுத் திட்டம் கடை பிடித்து, தேவையான எடை பெற்றதும், வளக்கம் போல் சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு

// நான் எப்போதும் கூறும் ஆலோசனையே, அடுத்த 3 மணி நேரத்துக்குத் தேவையான உணவை மட்டும் சாப்பிட்டு//
என்று நீங்கள் குடுத்த விளக்கத்தோடு, அரிசியை கூக்கரில் வைக்காமல் வடித்து அளவாகச் சாப்பிட்டால் எடை ஏறாது என்றும் நினைக்கிறேன்.

தங்கள் ஆலோசனைக்கு மிக மிக நன்றி!.

அடிக்கடி வாங்க.
நன்றி!
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?