3. பிங்க் போர்ரிட்ஜ் (நம்ம ஊரு கூழ் தாங்க)

செய்யும் நேரம்: 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1/2 கப்
2. உப்பு தேவையான அளவு
3. மோர் - 2 கப்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்கவிட வேண்டும். சிறிது உப்பு சேர்க்கவும்.
2. கேழ்வரகு மாவை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கலக்கி கொண்டு கொதித்த நீரில் ஊற்றி நன்கு கிளற வேண்டும். (இந்த மாதிரி கிளறுகின்ற வேலை எல்லாம் வீட்டில் உள்ள ஆண்களிடம் விட்டுவிடுங்கள்:))
3. தோசை மாவு பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
4. அரை டம்ளர் கூழுடன் அரை டம்ளர் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். பிங்க் போர்ரிட்ஜ் தயார்!

பின் குறிப்பு:
1. ஒரு வாரம் வரை இதை ஃப்பிர்ட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
2. காலை சிற்றுண்டிக்கு மிகவும் நல்லது.
3. இதில் கெலொரி (Calorie) மிகவும் குறைவு.
4. கோடை காலத்திற்கு மிகவும் உகந்த உணவு.
5. "கூழ்" பழமையான வார்த்தையாக இருந்தால், "பிங்க் போர்ரிட்ஜ்"(Pink Porridge) என்று புதுமையாக கூறுங்கள்:))

விமரிசனங்கள்

ம்ம் நம்ம கேவுறு (கேழ்வரகு) கூழ ஸ்டைல் அ பிங்க் போரிட்ஜ் நு பேர மாத்தி போட்டு பேரு வாங்க பார்க்கறிங்க :-))
 
வாங்க வவ்வால்.
இப்படி புதுமையா பெயர் வைத்தது, நல்ல ஆரோக்க்யமான உணவை நகர மக்களும் தெரிந்து கொள்வார்கள் என்பதால் தான். சினிமாவிலே பழையப் பாட்டை Remix செய்து புதிய படங்களில் போடுவதுப் போலத்தான் :))
 
நல்லா இருக்குதுங்க!

அப்படியே நம்ம ஊரு பழைய சோத்துக்கும் டீஜண்டா எதுனா பேரு இருக்குதா?
 
வாங்க சிபி.
முதல் வருகைக்கும் பினூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அடிக்கடி வாங்க!.

பழையதுக்கு இந்த ஊருல (யூ.எஸ்) "லெஃப்ட் ஓவெர்ஸ்" (Left Overs)னு சொல்லுறாங்க. அதை பெறுமையாதான் சொல்லுவாங்க :).

டீஜண்டா "நேற்றுணவு" நு சொல்லலாமா :)

நன்றி!
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?