2. ஏல்லோரையும் அண்ணே அக்கா என்பது

பொதுவாக பெண்கள் முன்பின் அறியாத ஆண்களை "அண்ணா" என்றும், அதே போல ஆண்கள் பெண்களை "அக்கா" என்றும் அழைக்கிரார்கள்.புதிதாக பார்ப்பவர்களை முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டு பின்பு “தெரிந்தவர்” என்றும், பழகிய பின் “நண்பர்” என்றும் ஏன் அழைக்க கூடாது?.

"அக்கா" என்றோ "அண்ணா" என்றோ கூப்பிட்டால் தவறு கிடையாது. ஆனால் ஒருவர் தனது சொந்த சகோதரியை போலவே மற்ற பெண்களையும் நடத்துவார் என்றால் கூப்பிடலாம். அதே போல தான் பெண்களும், சில ஆடவரை சந்திக்கும் போது, “அண்ணா” என்று அழைப்பார்கள். இது பாசத்தால் வந்த வார்த்தையாக கூட இருக்கலாம்.

பெயரோடு “திரு” (அ) “திருமதி” (அ) “செல்வன்” (அ) “செல்வி” (இது வேலைக்கு ஆவாது), சரி வெறும் பெயரோடு, "வாங்க" "போங்க" சொன்னாலே போதுமே. உங்கள் சொந்த அண்ணனை (அ) அக்காளை விட புதியவர்கள் எப்படி அந்த உன்னதமான உறவிர்க்கு பெயர் கொள்ள முடியும்.

பெண்களை "அக்கா" என்றழைத்தால் “அட உன்னை விட நான் அவ்வளவு பெரியவளா ?” என்றும் ஆண்களை அண்ணா என்றழைத்தால் “சும்மா டயம் பாஸ்க்கு கடலை போடலாம்னு நெனைச்சா…அண்ணானு சொல்லிட்டாளே சன்டாளி” என்றும் வருத்தப்படமாட்டார்களா??

ஆகையால் மக்களே எல்லோரையும் "அண்ணா" என்றும் "அக்கா" என்றும் சொல்லிவிட்டு மனதிற்குள்ளே சபலத்தோடு சின்னப்புள்ள தனமா இருப்பதர்க்கு பதிலாக எல்லோரையும் தெரிந்தவராக பிறகு நண்பனாக தோழியாக கருதுங்கள்.

விமரிசனங்கள்

பெண்கள் அண்ணா சொல்றது எங்கே செல்லம் ,டார்லிங் நு சொல்லிடுவாங்களோ என்ற பயத்தில் தான் :-)) நாம யாரையும் அக்கா,தங்கை சொல்றதே இல்லை எல்லாமே நண்பர்கள்னு நினைப்பவன்!நீங்களும் அப்படியே நினைப்பவர் போல் உள்ளது.
 
வாங்க வவ்வால்.
பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் "அண்ண,அக்கா" என்றழைப்பது சர்வ சாதாரனம். நட்பு என்னும் அருமையான உறவை இவர்கள் ஏற்க அஞ்சுகிரார்கள் அதனால் மறுக்கிறார்கள்.

"அண்ணா" "அக்கா" என்றழைத்து, வயதில் பெரியவர்கள் சொல்வதை சிறியவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்னும் சூழ்நிலையை இவர்களே உருவாக்குகிறார்கள்.

நட்பு என்றால் சமத்துவம் வருமென நான் நம்புகிறேன்!
நானும் உறவினர்களைத் தவிர மற்றவர்களை நண்பர்களாகவும் தோழிகளாகவும் தான் கருதுகிறேன்.

நன்றி!!
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?