வியாழன், ஜூன் 29, 2006
12. கால் பந்தால் உலகம் அழிவு!
பல பேருக்கு கால் பந்து என்றால், கால் பந்தாட்டம் தான் நினைவுக்கு வரும். இந்த கால் பந்தாட்டம், யு. எஸ் இல் கைகளால் விளையாட படுகிறது (கிழக்கைச் சார்ந்த நாடுகளின் செயல்களை மாற்றி செய்வதே மேற்கு நாடுகளின் வழக்கமாயிற்றே :))
இதற்கும் ஒரு சுவாரசியமான வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில், இங்லாண்ட் நாட்டை சேர்ந்த கால் பந்தாட்ட வீரர், விளையாடும் போது, எவ்வளவு நேரம் கால்களால் இந்த பந்தை விளையாடுவது என களைத்து போய், கைகளில் பந்தை எடுத்து ஓடத் துவங்கினாராம். இவர் பெயர் விவரம் தெரியவில்லை. இப்படி கைகளாலும் விளையாடி கோல் போடலாமே என்று உதித்த விளையாட்டு தான் "ரக்பி" (Rugby) விளையாட்டு.

புதிய விளையாட்டு தான் உருவயிற்றே. எல்லா பந்தும் ஏன் உருண்டையாக இருக்க வேண்டும் என்று, முட்டை வடிவம் பந்தை ரக்பிக்கு பயன்படுத்தினார்கள். இந்த வடிவம் கைகளுக்கு பிடிக்கவும் வாட்டமாக இருக்கும்.
மத்திய 1800 ஆம் ஆண்டுகளில், இங்லாண்ட் நாடும், அமெரிக்கா நாடும், அமெரிக்காவில் உள்ள மாசசுசட்ஸ் (Massachutes) என்னும் இடத்தில் கால் பந்தாட்டம் விதிமுறைகளிலிருந்து சிறு மாற்றங்களோடு புதிய ரக்பி விளையாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் அமெரிக்கா "ஃபுட்பால்" என்றே இந்த விளையாட்டை அழைத்தது.
1920 இல், நிறைய அமெரிக்கர்கள் விளையாட தொடங்கி, பின் இதற்கு தொழிற் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது உருவானது தான் "அமெரிக்கன் ப்ரொஃபெஷ்னல் ஃபுட்பால் அசோசியேஷன் " (American Professional Football Association APFA). இது பின் "நேஷனல் ஃபுட்பால் லீக்" (Natioanl Football League NFL) என மாறியது.
கால் பந்தால் உலக அழிவு என்று தலைப்பை
வைத்து விட்டு, இது என்ன வரலாறு சொல்கிறேன் என சந்தேகமா? இருங்க சொல்லுறேன். இப்படி அமெரிக்காவிற்கு பிடித்த விளையாட்டு, அமெரிக்கா அரசியலுக்கும் பிடித்து விட்டது. உலகிலேயே அதிக சக்தியுள்ள மனிதராக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி, எங்கு சென்றாலும் அவருடைய தளபதி லியூடனன்ட் ஜெனரல் (Lieutanant General) "ஃபுட்பால்" எனும் சிறிய பெட்டியை கூடவே எடுத்து செல்வார்.
அந்த பெட்டியிலே என்ன விசேஷம் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது :).
அது சும்மா விளையாட்டு பெட்டி இல்லை மக்களே. உலகெங்கும் அணு ஆயுத போரை துவங்க கூடிய கணிணி மற்றும் அதை சார்ந்த "கோட்ஸ்" (Codes) அதில் இருக்கின்றன. அந்த பெட்டிக்கு "டூம்ஸ்டே ப்ரீஃப் கேஸ்" (Doomsday Briefcase) என்றும் ஒரு பெயர் உண்டு.
நேற்று அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் "ஏர் ஃபோர்ஸ் ஒன்" (Air Force One) விமானத்தை பற்றி ஒரு டிவிடி பார்த்தேன். அதில் கிடைத்த ஃபுட்பால் தகவலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள நினைத்தேன்.
ஜனாதிபதி விமானத்தில் பறக்கும் சமயத்தில், அமெரிக்கா தாக்கப் பட்டால், விண்ணிலிருந்தே அணு ஆயுத போரை துவக்க எல்லா வசதிகளும், வழிமுறைகளும் கொண்டது தான் அந்த ஃபுட்பால் பெட்டி. அந்த ஃபுட்பாலால் உலகத்திற்கு அழிவு என்றோ ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம். அவ்வளவு வலிமை மிக்கது அந்த ஃபுட்பால்!
சுற்றி வளைத்து பேச தெரிந்தது, எழுதவும் இப்போது உதவுகிறது :))
பின் குறிப்பு:
இதற்கு உபயோகமாக இருந்த வலைப்பு www.football.com மற்றும் "Airforce One" National Geography DVD.
விமரிசனங்கள்
முதல் வருகைக்கும் பினூட்டத்திற்கும், பாராட்டிற்கும் மிகவும் நன்றி!.
யஹூ அரட்டைக்காக வைத்த பெயர் இந்த நரியா. வலைப்பூக்கும் அதையே பயன் படுத்திக் கொண்டேன்.
இதற்கு பொருள் எனக்கு தெரியாது. அரட்டையில், "நரியா" அரேபிய மொழியில் "நெருப்பானவள்" என்று பொருள் என்று சிலர் கூறினர்.
சிலர் இது என்ன வீட்டு நரியா, காட்டு நரியா இல்ல குள்ள நரியா என்று கூட கேட்டார்கள் :). முதலில் கூறிய பொருளே நன்றாகத் தான் இருக்கிறது. அதையே வைத்துக் கொள்வோம் :).
நன்றி. மீண்டும் வருக!
<< Home