வெள்ளி, ஜூன் 23, 2006
10. என் இனிய ஆறு
ப்ளாக் ஆரம்பித்து 23 நாட்களே ஆகின்றன. அதற்குள் ஆறு விளையாட்டில் பங்கு கொள்ள அழைத்த செல்வனுக்கு மனமார்ந்த நன்றி.

பிடித்த விளையாட்டு
1) வாலிபால் (பீச்சில் விளையாடுவது இன்னும் பிடிக்கும்)
2) பாட்மின்டன்
3) சொப்பு சாமான் - சிறிய வயதில் வீட்டிற்கு வெளியே விளையாடியது. இப்போது வீட்டிற்குள் :)
4) என் பி ஏ கூடைப் பந்தாட்டம் பார்க்க பிடிக்கும்
5) கேரம் போர்டு
6) கூட்டாஞ் சோறு
சிறிய வயதில் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு எல்லாம் திருடி, தோழிகளுடன் ஒன்றாக கூட்டாஞ் சோறு சமைத்து, அரை வேக்காடாக உண்டது ஒரு நல்ல மறக்க முடியாத அனுபவம் :)
பார்க்க விரும்பும் நாடுகள்: (முதல்ல இந்தியா முழுமையா பார்க்கனும்)
1) ஈஜிப்ட்
2) சைனா
3) அர்ஜென்டினா
4) இடாலி
5) சௌதி அரேபியா
6) நிலா (இன்னும் இங்க பாட்டி வடை சுடுறாங்களான்னு பார்க்கனும் :)) )
பிடித்த இந்திய நடிகைகள்:
1) ஸ்ரீதேவி
2) சாவித்ரி
3) மாதுரி தீக்ஷித்
4) பத்மினி
5) மனோரமா
6) மீரா ஜாஸ்மின்
பிடித்த இந்திய நடிகர்கள்:
1) சிவாஜி
2) நாகேஷ்வராவ்
3) அமிர்கான்
4) பிரகாஷ் ராஜ்
5) சிவகுமார்
6) சூர்யா
இன்னும் இரண்டு பெயர சேர்த்து சொல்லுறேனே.
7) தலைவர் கவுண்டமணி
8) என் எஸ் கிருஷ்ணன்
பிடித்த உணவுகள்: 6 எண்ணிக்கை கண்டிபா பத்தாது :))
1) என் அம்மா சமைத்து பரிமாரும் முழு உணவு (Full meals).
என் அம்மா வைக்கும் சாம்பாருக்கு என்ன மணம் என்ன மணம். அவர் வைக்கும் ரசத்திற்கு ஈடு இணையே இல்லை. அவர் சமைக்கும் எல்லா சமையலிலும் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.
2) இட்லி வெங்காயச் சட்னி
இட்லியுடன், நல்லெண்ணை கலந்த வெங்காயச் சட்னி இருந்தால் சும்மா கப கபன்னு சாப்பிடலாம்.
3) பரோட்ட காய்கறி குருமா
ஹோட்டல் சரவண பவனில் பரோட்டாவும் காய்கறி குருமாவும் பிரமாதமாக இருக்கும்.
4) ஸ்பைசி பாஸ்தா மற்றும் காய்கறி பீட்ஸா
5) காரப் பணியாரம் தேங்காய்ச் சட்னி
6) கேழ்வரகு அடை
பி(ப)டித்த புத்தகங்கள்:
1) டாக்டர் உதய மூர்த்தியின் "எண்ணங்கள்"
2) திருக்குறள் - இன்னும் முழுமையாக படிக்கவில்லை
3) The Last Temptation - Val McDermid
4) Dark side - P.T. Dueterman
5) Blood Line -Sidney Sheldon
6) சேக்கிழார் அடிச்சுவட்டில் (படித்துக் கொண்டிருப்பது)
பார்க்க விரும்பும் (விரும்பிய) மக்கள்:
1) M.S. சுப்புலக்ஷ்மி அம்மா
2) இளையராஜா
3) அப்துல் கலாம்
4) மைக்கேல் ஜாக்சன்
5) காமராஜர்
6) அன்னை தெரஸா
பிடித்த தமிழ் படங்கள்:
1) சதி லீலாவதி
2) பாட்ஷா
3) சபாஷ் மீனா
4) மாயா பஜார்
5) வாலி
ஆறு விளையாடிற்கு யாரை அழைப்பதென்றே தெரியவில்லை. எனக்கு தெரிந்தவர்களை ஏற்கனவே அழைத்து விட்டனர். இருப்பினும் புதிய நண்பர்களை அழைக்கிறேன்.
1) கீத லதா
2) சுமா
3) சௌமியா
5) செந்தழல் ரவி
வாருங்கள் அனைவரும். உங்களுக்கு பிடித்த "ஆறு" களைப் பற்றி கூறுங்கள்!
விமரிசனங்கள்
6 பதிவுக்கு நன்றி நாரியா
அன்புடன்
செல்வன்
மிகவும் நன்றி!
சில வருஷத்திலே இந்தியா தான் "சந்தராயன்" விட போகுதே, அதுலே ஃபுட் போர்ட் அடிச்சாவது நிலாக்கு போய்யிடனும் :)).
எங்க தலைவர் கவுண்டமணி உங்களுக்கும் ரொம்ப பிடித்தது மிகவும் மகிழ்ச்சி! அப்ப "அகில உலக கவுண்டமணி நற்பணி மன்றம்" என்று ஒன்னு ஆரம்பிச்சிடலாமா ?? :)).
கவுண்டமணி "லொல்லு" கான்செப்ட் தமிழகத்திலே அறிமுகப் படுத்தினார். அவர் விசிரியான எனக்கும் கொஞ்சம் லொல்லு ஒட்டிக்கிச்சு :)
மறக்க முடியாத பாடல்களில் ஸ்ரீதேவி, சூப்பர் ஸ்டாரின் "சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா" ரொம்ப அருமையான பாட்டு. இனிமையான கீதம். கேட்டுரிக்கீங்களா?
நிறைய புத்தகங்கள் படித்திருந்தால், அதுல 6 புத்தகங்கள் சிந்தித்து குறிப்பிடலாம். படித்ததே 6 க்கும் குறைவு, சுலபமாக சொல்லிவிட்டேன் :)).
6 விளையாட்டிற்கு அழைத்ததற்கு மீண்டும் நன்றி $சல்வன்.
என் பதிவு படிச்சு சிரிப்பு வருதுன்னு சொல்லுறீங்க ஒத்துக்குறேன். ஆனா சிந்திக்கவும் செய்றீங்கன்னு சொல்லுரீங்களே :)) சந்தேகமா இருக்கு.
உங்க 6 ஐ எதிர்பார்க்கிறேன் கீதா.
சீக்கிரம் போட்டுத் தாக்குங்க :))
இது தான் வாய்ப்பு, விட்டுறாதீங்க. சும்மா எத்தன 6 வேணும்னாலும் போடுங்க. நாங்க தெரிஞ்சுகிறோம்.
இது என்ன அரசாங்க 6 ஆ ரெண்டோட நிறுத்திக்க :)).
உங்க ஆற ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
நன்றி!!
(நாரியாவுக்கு ஐஸ்தானே வைக்கிறீர்..ஹிஹி)
நாரியா..
http://imsai.blogspot.com/2006/06/blog-post_22.html
ஏற்கனவே எனக்கு பிடித்த ஆறு போட்டு இருக்கிறேன்....
ஆனாலும் உங்கள் அழைப்பை ஏற்று ஆறு இன்று மாலைக்குள் போடுகிறேன்..
முதல் முதலா பிளாக் துவக்கியிருப்பவரை வாழ்த்தாமல் என்ன செய்ய முடியும்?புதியவர்களை ஊக்கப்படுத்தினால் தான் உங்களை மாதிரி பெத்த பேர் எடுக்க முடியும்:-))))
நாரியா
தமிழ்மணத்தில் பதிவு செய்துவிட்டீர்கள் போல.வாழ்த்துக்கள்
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
6 போட சொன்னாங்க நானே 8 போடிட்டேன். அதனால தான் வடிவேல் சேர்க்கல.
மீரா ஜாஸ்மினும் சூர்யாவும் இன்னும் சேர்ந்து நடிக்கல. இனிமே நடிச்சா நல்ல தான் இருக்கும் ஜோடி :)
வருகைக்கு நன்றி!
நரியா
அழைத்த்தற்கு நன்றி நாரியா...
இன்னும் ஒன்று உங்களுக்காய் உடம்பு சரியானதும் பொட்டுருவேன்..
கொஞ்சம் காய்ச்சல் அவ்வளவே
and remove other and anonumous option
na' nambi arura(a)n mani(3)an. romba arukkurano? nandri naria ennai varavetradhukkum vazhthiadharkkum.
முதல் வருகைக்கு நன்றி. நீங்க ஏற்கனவே ஆறு போட்டாச்சா :).
அதுவே போதும் சிரில். காய்ச்சல் சீக்கிரம் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி!
Indru ungalin aaru (6) padiththen
neengal santhikka virumbum(..biya)nabarkalil Annai Thera vai kuripittu iruntheerkall .... Annai Therasavai neril athuvum Chennaiyil santhiththu avar aasiyum kidaikka petra perum baakiyavaan intha nanban.
Neengal padikka vendiya puththakangalil.... Deivaththin Kural ...serththukkollungall...... Kaanji Periyavar , Sri Sri Saradha Beedam eluthiyathu.
Anbudan
Jothi Prakash ( ungalukku nikajo)
நீங்கள் நிஜமாகவே பாக்யசாளி தான். பாராட்டுக்கள்.
நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கிறேன்.
நன்றி!
உங்கள் அழைப்பை ரெம்ப நாள் கழித்து இப்பத்தான் திடீரென பார்த்தேன்..
மன்னிக்கவும்..
அழைப்புக்கு ரெம்ப நன்றி.
:)
<< Home