வியாழன், ஜூன் 01, 2006
1. ஸ்பைசி பாஸ்தா

தேவையான பொருட்கள்:
1. பாஸ்தா – 2 கப்
2. வெங்காயம் நறுக்கியது - 1 கப்
3. தக்காளி நறுக்கியது - 1 கப்
4. மிளகாய்த்தூள்– 1 தே கரண்டி
5. உப்பு தேவையான அளவு
6. சமையல் எண்ணை – 4 தே கரண்டி
7. கொத்தமல்லி தழை சிறிது பொடிதாக நறுக்கியது
செய்முறை:
1. பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரை வேக வைக்க வேண்டும் (குக்கர் இல்லாதவர்கள், ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின் பாச்தவை அதில் போட்டு, 10 நிமிடஙள் வேக வைக்க வேண்டும். பின் பாஸ்தாவை வடிகட்டி கொள்ளவும்).
2. வானலியில் எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கி கொண்டு பின் நறுக்கிய தக்காளியையும் வதக்கி கொண்டு, சிறிது ஆறியபின், அரைத்துகொள்ள வேண்டும்.
3. மிதமான தீயில், அரைத்த விழுதை மீண்டும் வானலியில் போட்டு, அதில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சிறிது தண்ணீர் ஊற்றிக்கொண்டால் கலக்க சுலபமாக இருக்கும்.
4. 3 நிமிடங்கள் கொதித்த பின்பு, கொத்தமல்லி தழையை பாஸ்தா மீது தூவி விட வேண்டும்.
5. ஸ்பைசி பாஸ்தா தயார்.
பின் குறிப்பு:
1. வேகவைத்த பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தால், உடனே தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும். பாஸ்தா தனித்தனியாக பிரிந்துவிடும். பின் வடிகட்டிக்கொள்ளலாம்.
2. இன்னமும் சுவை சேர்க்க, சிறிது முந்திரி அல்லது தோல் நீக்கிய பாதாம் அல்லது தேங்காயையோ அரைத்து பாஸ்தாவுடன் கலக்கலாம் (செய்முறை 3.)
3. பாஸ்தாவில் நிறைய தாது பொருட்கள் இருக்கின்றன.
4. பாஸ்தா இந்தியாவில் “Food World” இல் கிடைக்கும்.
5. இரவு உணவிற்கு பாஸ்தா நன்றாக இருக்கும்.
விமரிசனங்கள்
dearest siriyaparavai,
how r u?hope all the good at home.
how abt the calorie content
will i put weight if have this during night.
Good receipie anyways
Bye for now
Accenture Azagi
how r u?hope all the good at home.
how abt the calorie content
will i put weight if have this during night.
Good receipie anyways
Bye for now
Accenture Azagi
vanakkam Naria ,
naan nikajo... nalla aarambam ....sil paatu vaithiya muraikalum ithula kudunga ..nalla upayokama irukkum.
Prakash
naan nikajo... nalla aarambam ....sil paatu vaithiya muraikalum ithula kudunga ..nalla upayokama irukkum.
Prakash
இங்கேயும் பாஸ்டா கிடைக்குது ஒரு தடவை செய்து பார்த்தேன் சுவை ஒன்றும் மெச்சும் படியாக இல்லை . வெள்ளைக்கார தொரைகளுக்கு மட்டும் புடிக்கும் போல இதுலாம் நமக்கெதுக்கு இந்த வேலை நு விட்டாச்சு:-))
வாங்க அசென்சர் அழகி.
நானும் வீட்டில் அனைவரும் நலம். நன்றி. நீங்க செளக்கியமா?
பாஸ்த்தா ஒரு கப் 200 கெலொரி கொண்டது. இரவு உணவு சற்று சீக்கிரமாகவும் சாதத்திர்க்கு பதிலாக இது மாதிரியான சற்றுண்டி சாப்பிடுவதாலும் எடை ஏறாது. ஒரு முறை செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று மறக்காமல் பின்னோட்டம் இடுங்கள்.
நன்றி,
நரியா

வாங்க ப்ரகாஷ்.
முதல் வருகைக்கும் பின்னோட்டத்திற்க்கும் மிகவும் நன்றி.
பாட்டி வைத்தியக் குறிப்பிகள் மறக்காமல் மின் அஞ்ஜலில்
அனுப்பவும். இங்கே கண்டிப்பா வெளியிடுரேன்.
நன்றி,
நரியா
Post a Comment
முதல் வருகைக்கும் பின்னோட்டத்திற்க்கும் மிகவும் நன்றி.
பாட்டி வைத்தியக் குறிப்பிகள் மறக்காமல் மின் அஞ்ஜலில்
அனுப்பவும். இங்கே கண்டிப்பா வெளியிடுரேன்.
நன்றி,
நரியா
<< Home