ஞாயிறு, செப்டம்பர் 10, 2006
17. கற்பூரம்

கற்பூரம், வெள்ளை நிறமற்ற மெழுகுத்தன்மை கொண்ட அதிக நாற்றமுள்ள கட்டி, சினமோனம் காம்ஃபோரா (cinnamonum camphora) என்ற மரத்திலிருந்து வருகிறது. இது ஆசியா நாடுகளில் வளரக்கூடிய மரம். இதன் வேதிய விதிமுறை(Formula) C10H16O .
கற்பூர மரங்கள் உஷ்ன நாடுகளான இந்தியா, ஈஜிப்ட் மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் அதிகமாக வளர்கின்றன. இம்மரத்தின் வேர், தண்டு மற்றும் காம்புகளில் இருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது.
நவீன உலகத்தில் கற்பூரம் பூச்சுக்கொல்லி தயாரிக்க பயன்படுகிறது. சில பட்டாசுக்கள்

கற்பூர மரங்கள் மிக மெதுவாக வளரும். முன்பு சைனா நாட்டில் கற்பூர மரங்களால் தான் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அதன் எண்ணை வாடையால் பூச்சுக்கள் வராது.

கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை பெற்றது கற்பூரம். இந்து மதத்தில் ஏன் கற்பூரம் ஆராதனை இறைவனுக்கு செய்து அதை அனைவரும் முகர்கிறோம் என்று இப்போது புரிகிறதா :).